யூனிபார்மில் பள்ளி மாணவி போட்ட குத்தாட்டம்.. இணையத்தில் வீடியோ வைரல் !

School girl dances in uniform in front of crowd video getting viral

கடந்த சில நாட்களுக்கு முன்னர், பேருந்தில் அரசு பள்ளி மாணவிகள் பீர் குடித்த சம்பவம் குறித்த வீடியோ இன்னமும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அது முடிவதற்குள் அதேபோல மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பேண்டு வாத்தியம் முழங்க நூற்றுக்கணக்கானோர் ஊர்வலத்தில் கலந்துக்கொண்ட போது யூனிபார்மில் மாணவி ஒருவர் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விழுப்புரம் எம்.ஜி.சாலை வழியாக சாமி ஊர்வலம் நடைபெற்றபோது, முதுகில் புத்தக பையை மாட்டிக்கொண்டு ஐந்து நிமிடம் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தார். இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து ரசித்த நிலையில், பலரும் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டவே, தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த 2 வீடியோக்கள் பொதுமக்கள் மனதில் ஒரு இனம் புரியாத பயத்தை ஏற்படுத்துகிறது என்பது உண்மை.

Share this post