நீலகிரி, கோவை, திருப்பூரில் இடி - மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

Heavy rain expected in coimbatore, nilgiris, tirupur district

தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, இன்று (மார்ச் 25) தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மார்ச் 26ம் தேதி, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மார்ச் 27ம் தேதி, தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

Share this post