பயணிகளே இனி நிம்மதியா இருக்கலாம் ! அரசு பேருந்துகள் நிறுத்தும் ஹோட்டல்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் !

Government bus stopping hotels has given strict instructions

அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் பொதுவாக ஒரு சில உணவகத்தில் நிறுத்தும் வழக்கம் உள்ளது. ஆனால், அதில் சுகாதாரம் மற்றும் விலை அதிகம் குறித்த சர்ச்சைகள் எழுந்ததால், தற்போது சில நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் உணவகத்தில் நிறுத்தம் செய்ய புதிய நிபந்தனைகள் கீழ்வருமாறு:

உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும்.

குறிப்பாக சைவ உணவு மட்டும் தான் தயார் செய்ய வேண்டும்.

உணவகத்தில் உள்ள கழிவறை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும்.

பயோ-கழிவறை வசதி அதுவும் இலவசமாக இருக்க வேண்டும்.

பேருந்துகள் உணவகத்திலிருந்து வெளியே வரும்போது ஓட்டுனருக்கு நெடுஞ்சாலையிலிருந்து வரும் பேருந்துகள் தெளிவாகத் தெரியும்படி உணவகத்தின் இடம் இருக்க வேண்டும்.

பயணிகளின் பாதுகாப்பு கருதி CCTV பொருத்தியிருக்க வேண்டும்.

உணவக முன்புற வாயிலில் பூட்டப்பட்டுள்ள புகார் பெட்டி.

உணவுப் பொருட்களின் விலைப்பட்டியல் பலகை பயணிகளுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும்.

உணவகத்தில் விற்கப்படும் பொருட்களின் விலை MRP விலையை விட அதிகமில்லாமல் இருக்க வேண்டும்.

Share this post