அப்போ இனி ஹோட்டல் புட் பிரியர்கள் நிலைமை ? சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.268 உயர்வு

Commercial gas cylinders price hike in chennai

கேஸ் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் கேஸ் சிலிண்டர் 2,119.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனம் இன்று உயர்த்தியுள்ளது. அதன்படி, 19 கிலோ எடையுள்ள ஒரு சமையல் கேஸ் சிலிண்டர் விலை 268. 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால், சென்னையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2,406 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதேவேளை, கடந்த 22ம் தேதி உயர்த்தப்பட்டு, சென்னையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை 965 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post