பதவியேற்ற பின்பு முதல் முறையாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று துபாய் பயணம்.! வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!

துபாய் கண்காட்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் இன்று மாலை 4 மணியளவில் சிறப்பு விமானத்தின் மூலம் துபாய் புறப்படுகிறார். உடன் எம் எம் அப்துல்லா, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பயணம் செய்யவுள்ளனர். முதலமைச்சராக மு க ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதல்முறையாக இன்று வெளிநாடு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த பயணத்தின்போது துபாய் கண்காட்சியில் தமிழக சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கை திறந்து வைக்கிறார். தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு சர்வதேச நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுப்பார் என கூறப்படுகிறது. இந்த கண்காட்சியின் போது பல்வேறு நாடுகளின் நிறுவனங்களுடன் சேர்ந்து தொழில் தொடங்குவதற்கு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.
வரும் 28ம் தேதி அபுதாபியில் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. நான்கு நாட்கள் துபாயில் தங்கியிருக்கும் முதல்வர் முக ஸ்டாலின் பின்னர் சென்னை திரும்புகிறார்.