தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு.! யாரும் தப்பிக்க கூடாது..!

Tamilnadu Chief Minister Mk Stalin New Order To Dgp Sylendra Babu Sexual Harrasment Case

பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. விருதுநகரில் சமீபத்தில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

22 வயதான இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் திமுக நிர்வாகி, நான்கு பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

முக்கிய குற்றவாளிகளான ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகியோரை மார்ச் 21ஆம் தேதி காவல் துறையினர் கைது செய்தனர். இதில், ஜுனைத் அகமது விருதுநகர் 10ஆவது வார்டு திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ஆவார். இவர்களில் பள்ளி மாணவர்கள் நான்கு பேரும், 17 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதால் அவர்கள் ராமநாதபுரத்திலுள்ள சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கொடூர குற்றத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகி ஜுனைத் அகமதுவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டார்.

இதுகுறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு நேரடியாகவும், மறைமுகமாகவும் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து அவர்கள் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு புலன் விசாரணை காவல் துணை கண்காணிப்பாளர் அர்ச்சனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை தென்மண்டல தலைவர் அஸ்ரா கார்க், மதுரை சரக டிஐஜி பொன்னி ஆகியோர் விருதுநகரில் முகாமிட்டு புலன் மேற்பார்வை செய்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

Share this post