மதுரை மேலூர் வாக்குச்சாவடியில் கிளம்பிய ஹிஜாப் சர்ச்சை.. பாஜக ஏஜென்ட்டால் ஏற்பட்ட பரபரப்பு..!

Hijab issue has been raised in madurai polling booth by bjp agent

தமிழகம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (19.2.2022) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் அனைவரும் அமைதியாக தங்கள் வாக்கை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், மதுரை மேலூரில் உள்ள 8வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்கு சாவடியில் ஹிஜாப் அணிந்து வந்த வாக்காளர்களிடம் ஹிஜாப்பை அகற்றுமாறு பாஜக பூத் ஏஜென்ட் கிரிராஜன் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு தேர்தல் அலுவலர்கள், மற்ற கட்சிகளின் முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தேர்தல் அலுவலர்களிடமும் திமுக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் முகவர்களிடமும் வாக்குவாதம் செய்து பராபரப்பை கிளப்பினார். இதனால் பாஜக ஏஜென்ட் வெளியேற்றப்பட்டார். சிறிது நேரம் நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு பாஜகவின் மாற்று ஏஜென்ட் வந்ததும் மீண்டும் தொடங்கியது.

Share this post