137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு ! பெட்ரோல் ரூ.102.16-க்கும்.. டீசல் ரூ.92.19-க்கும் விற்பனை

Petrol and diesel price hike for customers after 4 months

சுமார் 4 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டுவந்தது. தற்போது, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை மீதான விலையை உயர்த்தி இருப்பதாக இன்று வெளியான அறிவிப்பினை தொடர்ந்து, பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து ரூ.102.16-க்கும், டீசல் விலை 76 காசுகள் அதிகரித்து ரூ.92.19-க்கும் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தொடர்ந்து உயர்ந்த போதிலும், பெட்ரோல், டீசல் விலையில் மற்றம் செய்யப்படவில்லை. சமீபகாலமாக விலை உயர்த்தப்படாமல் சில்லறை விற்பனை நடைபெற்றுவந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை உயர்த்தப்படுவதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்து வர கூடிய நாட்களில் மேலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

ஏற்கனவே மொத்த கொள்முதல் மீதான டீசல் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ள சூழலில், தற்போது பொது மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய கூடிய சில்லறை விற்பனையிலும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. கேஸ் விலையும் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

Share this post