Alert ! பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.1,000 வரை அபராதம் !

Fine for those who didnt link aadhar card and pan card

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக வருமான வரித்துறையால் பான் கார்டு வழங்கப்படுகிறது. அதனுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த 2 வருடத்திற்கும் மேலாக வருமான வரித்துறை வலியுறுத்தி வருகிறது.

இதற்கான காலக்கெடுவை நீட்டித்து வந்தது. இதற்கிடையே, கடைசியாக நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசம் இன்று (வியாழக்கிழமை) முடிவடைகிறது. இதுகுறித்து வருமான வரித்துறை அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுருப்பதாவது:-

‘பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31ம் தேதி (இன்று) கடைசி நாள். இணைக்காவிட்டால் பான் எண் செயலிழந்து விடும். அத்துடன் 31ம் தேதிக்கு பிறகு அபராதம் செலுத்தித்தான் ஆதார் எண்ணை இணைக்க வேண்டி இருக்கும். ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து ஜூன் 30ம் தேதிக்குள் இணைப்பதற்கு ரூ.500 அபராதமாக செலுத்த வேண்டும்.

அதன்பிறகு இணைப்பதற்கு ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். அபராதம் செலுத்தினால்தான், பான் எண் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்’ என கூறப்பட்டுள்ளது.

வங்கி கணக்கு தொடங்குதல், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வங்கி கணக்கில் பணம் செலுத்துதல், அசையா சொத்துகள் வாங்குதல், நிதி பரிமாற்றம் போன்றவற்றுக்கு பான் எண் குறிப்பிடுவது கட்டாயம் ஆகும்.

வரி செலுத்துவோர் தங்களது பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை வருமானவரி இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this post