ஹீரோயின் லுக்கில் வீரம் பட குழந்தை நட்சத்திரம் யுவினா.. வைரலாகும் செம ஸ்டைலிஷ் போட்டோஸ் !
2011ம் ஆண்டு ஒளிபரப்பாகி வந்த உறவுக்கு கை கொடுப்போம் என்னும் சீரியல் தொடர் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் யுவினா. இதனைத் தொடர்ந்து, வீரம் திரைப்படத்தில் முக்கிய குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
மஞ்சப்பை, மேகா, அரண்மனை, கத்தி, ஜெய்ஹிந்த் 2, மாஸ், காக்கி சட்டை, ஸ்ட்ராபெர்ரி, சர்க்கார் போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும், As I’m Suffering From Kadhal என்னும் வெப் சீரீஸ்ல் நடித்திருந்தார்.
சுமார் 15திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள யுவினா, தமிழை மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது பல்வேறு விளம்பரங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
கடைசியாக இவர் நடிப்பில், கடந்த 2018 ஆம் ஆண்டு, சர்க்கார் படம் ரிலீஸ் ஆகிய நிலையில், தற்போது படிப்பிலும், அவ்வப்போது சில ரியாலிட்டி ஷோக்களிலும் தனது அம்மாவுடன் கலந்து கொண்டார்.
தற்போது, ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிய யுவினா, அவ்வப்போது தனது ஸ்டைலிஷ் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.