"இவனுங்க தொல்ல தாங்க முடியல".. - விஜய் படம் குறித்து யுவன் பகிர்ந்த கிண்டல் பதிவு..!
விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தின் மீது மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில், அவரோடு பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மோகன் ஆகியோர் நடிக்க வெங்கட் பிரபு படத்தை இயக்கியுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது, விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கான பின்னணி இசையமைப்பு வேலைகளை யுவன் தற்போது தொடங்கியுள்ளதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், இந்த வாரத்தில் கோட்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, புகைப்படத்தை பகிர்ந்து உள்ள யுவன் இவனுங்க தொல்ல தாங்க முடியல என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
Share this post