சரத்குமார், ஷாம் தொடர்ந்து.. தளபதி 66 படத்தில் இணைந்த பிரபல தமிழ் பட நடிகர் !

Yogi babu to act in thalapathy66 update to reveal soon

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து, தோழா படத்தின் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி அவர்கள் விஜய் வைத்து இயக்கும் திரைப்படம் தளபதி66. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகவுள்ளது.

Yogi babu to act in thalapathy66 update to reveal soon

இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக ரஷ்மிகா மந்தனா, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் மற்றும் ஷாம் நடிக்கின்றனர்.

Yogi babu to act in thalapathy66 update to reveal soon

விஜய்யின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற குடும்ப பின்னணி படமாக உருவாகிறது என்ற தகவல் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தளபதி 66 படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Yogi babu to act in thalapathy66 update to reveal soon

இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் யோகிபாபு நடித்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குமுன் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், சர்க்கார், பீஸ்ட் ஆகிய படங்களில் யோகிபாபு நடித்தது குறிப்பிடத்தக்கது.

Yogi babu to act in thalapathy66 update to reveal soon

Share this post