'விஜய் பத்தி அஜித் Shooting Spotல கேட்ட விஷயம்' வைரலாகும் யோகி பாபு வீடியோ !

Yogi babu speaks about vijay and ajith in an interview

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பல பிரபலங்கள் தற்போது தங்களது வெற்றி திரைப்பயணத்தை நடத்தி வருகின்றனர். அப்படி அறிமுகமானவர் நடிகர் யோகி பாபு.

Yogi babu speaks about vijay and ajith in an interview

ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றி வந்த இவர், சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் அமீர் நடிப்பில் வெளியான யோகி படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். பாபு என்ற இவரது பெயர் அதன் காரணமாகவே யோகி பாபு என மாறியது.

Yogi babu speaks about vijay and ajith in an interview

இதனைத் தொடர்ந்து, தில்லாலங்கடி, பையா, வேலாயுதம், ராஜபாட்டை, கலகலப்பு, அட்டகத்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, பிரபல முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Yogi babu speaks about vijay and ajith in an interview

மான் கராத்தே, வீரம், ஐ, காக்கி சட்டை, காக்க முட்டை, ஜாக்சன் துரை, குற்றமே தண்டனை, ரெமோ, மெர்சல், கோலமாவு கோகிலா, சர்க்கார், அயோக்கியா, கோமாளி, தர்பார், அரண்மனை 3, பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மண்டேலா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

Yogi babu speaks about vijay and ajith in an interview

தற்போது, 10திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் மற்றும் அஜித் குறித்து அவர் பேசிய பேட்டி வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சர்க்கார் ஷூட்டிங் முடித்து விஸ்வாசம் ஷூட்டிங் வந்த போது, விஜய் குறித்து அஜித் பேசியதாக கூறியுள்ளார். அப்போது, அஜித் ஒருமுறை, சர்க்கார் ஷூட்டிங் முடித்து வந்த போது, விஜய் எப்படி இருக்காரு என விசாரித்ததாக கூறியுள்ளார். அதே போல, அஜித்தும் விஜய் குறித்து விசாரித்துள்ளதாக அவர் பேசியுள்ளார்.

Share this post