டாப் நடிகர்களுக்கு யோகி பாபு கொடுத்த அதிர்ச்சி.. விஜய் சேதுபதிய மிஞ்சிட்டாராமே.. என்ன விஷயம் தெரியுமா ?

Yogi babu overtake vijay sethupathi in number of films committed

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பல பிரபலங்கள் தற்போது தங்களது வெற்றி திரைப்பயணத்தை நடத்தி வருகின்றனர். அப்படி அறிமுகமானவர் நடிகர் யோகி பாபு.

Yogi babu overtake vijay sethupathi in number of films committed

ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றி வந்த இவர், சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் அமீர் நடிப்பில் வெளியான யோகி படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். பாபு என்ற இவரது பெயர் அதன் காரணமாகவே யோகி பாபு என மாறியது.

Yogi babu overtake vijay sethupathi in number of films committed

இதனைத் தொடர்ந்து, தில்லாலங்கடி, பையா, வேலாயுதம், ராஜபாட்டை, கலகலப்பு, அட்டகத்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, பிரபல முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Yogi babu overtake vijay sethupathi in number of films committed

மான் கராத்தே, வீரம், ஐ, காக்கி சட்டை, காக்க முட்டை, ஜாக்சன் துரை, குற்றமே தண்டனை, ரெமோ, மெர்சல், கோலமாவு கோகிலா, சர்க்கார், அயோக்கியா, கோமாளி, தர்பார், அரண்மனை 3, பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மண்டேலா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

Yogi babu overtake vijay sethupathi in number of films committed

மண்டேலா திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் யோகி பாபுவை பற்றிய செய்தி அதிகம் பேசப்பட்டு வருகின்றன. அதாவது, யோகி பாபு தற்போது 41 படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதைக் கேட்ட சினிமா பிரபலங்கள் பலரும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் இருக்கின்றனர். ஏனென்றால் முன்னணி நடிகர்களே இரண்டு மூன்று படங்களில் தான் கமிட் ஆகி நடிக்கின்றனர். ஆனால் யோகி பாபு இத்தனை படங்களை கைவசம் வைத்திருப்பது பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றன.

Yogi babu overtake vijay sethupathi in number of films committed

அண்மை காலமாக, நடிகர் விஜய் சேதுபதி வருடத்திற்கு 10, 11 படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் என அதிகம் பேசப்பட்டது. ஆனால் தற்போது விஜய் சேதுபதியையும் மிஞ்சியுள்ளார் யோகி பாபு என கூறப்படுகிறது.

Share this post