Viral Video: எந்த சேனல்? உன் பேரு என்ன? செய்தியாளர் கேள்வியால் கடுப்பான யோகி பாபு

yogi babu got angry in press meet video getting viral

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பல பிரபலங்கள் தற்போது தங்களது வெற்றி திரைப்பயணத்தை நடத்தி வருகின்றனர். அப்படி அறிமுகமானவர் நடிகர் யோகி பாபு.

yogi babu got angry in press meet video getting viral

ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றி வந்த இவர், சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் அமீர் நடிப்பில் வெளியான யோகி படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். பாபு என்ற இவரது பெயர் அதன் காரணமாகவே யோகி பாபு என மாறியது.

yogi babu got angry in press meet video getting viral

இதனைத் தொடர்ந்து, தில்லாலங்கடி, பையா, வேலாயுதம், ராஜபாட்டை, கலகலப்பு, அட்டகத்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, பிரபல முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

yogi babu got angry in press meet video getting viral

மான் கராத்தே, வீரம், ஐ, காக்கி சட்டை, காக்க முட்டை, ஜாக்சன் துரை, குற்றமே தண்டனை, ரெமோ, மெர்சல், கோலமாவு கோகிலா, சர்க்கார், அயோக்கியா, கோமாளி, தர்பார், அரண்மனை 3, பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மண்டேலா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது, 10திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

yogi babu got angry in press meet video getting viral

தற்போது யோகி பாபு பொம்மை நாயகி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசி கொண்டிருக்கும் போது, செய்தியாளர் ஒருவர் சத்தம் அதிகமாக நீங்க சின்ன படத்தின் நிகழ்ச்சியிலெல்லாம் கலந்துகிட மாட்டிங்களாமே என கேட்க.

yogi babu got angry in press meet video getting viral

இதனால் கடுப்பாகிய யோகி பாபு வாரிசு படம் பெரிய படம் அது இசைவெளியீட்டு விழாவில் நான் கலந்துகொள்ளவில்லை, பொம்மை நாயகி சின்ன படம் நான் வந்திருக்கிறேன், நேரமும் காலமும் தான் நிர்ணயிக்கணும் என கூறி உங்க பெயர் என்ன என செய்தியாளரை கேட்கவே, அதற்கு பதில் கூறிய செய்தியாளரிடம் இதே குரலில் பேசுங்கள் என கூறி சென்றுள்ளார். இதன் வீடியோ செம வைரலாகி வருகிறது.

Share this post