Viral Video: "OC'லயா நடிச்ச.. 4 சீனோ.. 40 சீனோ காசு வாங்கிட்டு தானே நடிச்ச" யோகிபாபுவை கிழித்து தொங்கவிட்ட தயாரிப்பாளர்கள்
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பல பிரபலங்கள் தற்போது தங்களது வெற்றி திரைப்பயணத்தை நடத்தி வருகின்றனர். அப்படி அறிமுகமானவர் நடிகர் யோகி பாபு.
ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றி வந்த இவர், சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் அமீர் நடிப்பில் வெளியான யோகி படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். பாபு என்ற இவரது பெயர் அதன் காரணமாகவே யோகி பாபு என மாறியது.
இதனைத் தொடர்ந்து, தில்லாலங்கடி, பையா, வேலாயுதம், ராஜபாட்டை, கலகலப்பு, அட்டகத்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, பிரபல முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மான் கராத்தே, வீரம், ஐ, காக்கி சட்டை, காக்க முட்டை, ஜாக்சன் துரை, குற்றமே தண்டனை, ரெமோ, மெர்சல், கோலமாவு கோகிலா, சர்க்கார், அயோக்கியா, கோமாளி, தர்பார், அரண்மனை 3, பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மண்டேலா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது, 10திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது யோகி பாபு ஹீரோவாக நடித்தது போல தாதா என்ற திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனிடையே தற்போது, அப்படம் குறித்து அதிர்ச்சியளிக்கும் பதிவை நடிகர் யோகி பாபு இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அதன்படி அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த படத்தில் நண்பர் நிதின்சத்யா ஹீரோவாக நடித்துள்ளார். நான் நான்கு காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளேன். தயவுசெய்து இதைப் போன்று விளம்பரம் செய்யாதீர்கள். நன்றி” என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
நான் தாதா படத்தில் 4 சீன்களில் தான் நடித்துள்ளேன். இது போன்று என் முகத்தை வைத்து புரமோட் செய்யாதீர்கள் என பட குழுவை சரமாரியாக கேள்வி கேட்டு இருக்கிறார். இப்படத்தின் கதாநாயகனான நிதின் சத்யா அவரது பதிவிற்கு ‘ஒரு நண்பனை விட்டுகுடுக்காம ரசிகர்களையும் விட்டுகுடுக்காம அந்த மனசு தான்’ என யோகி பாபுவை டேக் செய்து பாசிட்டிவாக பதிலளித்துள்ளார்.
இருப்பினும், தாதா படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கூட யோகி பாபு வர மறுத்திருக்கிறாராம். இவருடைய இந்த செயலை கண்டித்து தாதா படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் பேசியிருக்கிறார்கள். இந்நிலையில், யோகி பாபு மீது நடவடிக்கை எடுக்க கோரி தாதா படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளனர். யோகி பாபு தங்களை படத்தை வியாபாரம் செய்ய விடாமல் தடுக்கிறார் அவரைத் தொடர்ந்து படங்களில் நடிக்க தடை விதிக்க கோரியும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதனால் இந்த விவகாரம் தற்போது பூகம்பகமாக வெடித்திருக்கிறது.
ஒரு நண்பனை விட்டுகுடுக்காம ரசிகர்களையும் விட்டுகுடுக்காம அந்த மனசு தான் @iYogiBabu 🙏🙏🙏 https://t.co/t1UuolEjjB
— Nitinsathyaa (@Nitinsathyaa) July 13, 2022