'டீ விற்றவர் தற்போது நாட்டை ஆள்கிறார்'.. திமுக அமைச்சருக்கு பதில் கூறிய யாஷிகா ! வைரலாகும் பதிவு

Yashika anandh replies for ponmudi speech about hindi speaking people comparing modi

இன்ஸ்டாகிராம் மாடலாக தனது கலை பயணத்தை தொடங்கிய யாஷிகா, தற்போது பிரபல நடிகையாக அதுவும் இளசுகளின் டாப் பேவரைட்டாக வலம் வருகிறார். சந்தானம் நடிப்பில் வெளியான இனிமே இப்படிதான் திரைப்படத்தில் அறிமுகமாக வேண்டிய யாஷிகா, சில காரணங்களினால் நடிக்க முடியாமல் போனது.

இதனைத் தொடர்ந்து, ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். பின்னர், துருவங்கள் 16, மணியார் குடும்பம் போன்ற திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

Yashika anandh replies for ponmudi speech about hindi speaking people comparing modi

அனால், இவர் நடிப்பில் வெளியான அடல்ட் காமெடி படமான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இளசுகளை தன் வலையில் வீழ்த்தினார். இதன் மூலம் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். இந்நிகழ்ச்சியின் மூலம் இவர் பெயர் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் ஆனது.

கழுகு 2, சோம்பி போன்ற திரைப்படங்களில் நடித்த இவர், இவன் தான் உத்தமன், ராஜ பீமா போன்ற பல தமிழ் திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். மேலும், தனது தாறுமாறு ஹாட் & கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களையும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் தமிழக அரசு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி ஒரு பேட்டியில், ‘ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என சொல்கிறார்கள், ஆனால் இங்கே பானி பூரி விற்பவர்கள் யார்’ என கேள்வி எழுப்பி இருந்தார். இது வடநாட்டு மீடியாக்களில் பெரிய சர்ச்சையாக்கப்பட்டது. ஹிந்தி பேசுபவர்களை பானி பூரி விற்பவர்கள் என சொல்வதா என பலரும் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்தும் அமைச்சருக்கு பதில் பேசி இன்ஸ்டா ஸ்டேட்டஸ் பதிவிட்டு இருக்கிறார். “ஒருவரது மொழிக்கும் வேலைக்கும் எந்த தொடர்பும் இல்லை சார். எல்லோரும் வாழ பணம் சம்பாதிக்க முயற்சி செய்கிறார்கள்.

Yashika anandh replies for ponmudi speech about hindi speaking people comparing modi

யாருடைய திறமையையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். ஒரு காலத்தில் டீ விற்றவர் தற்போது நாட்டை ஆள்கிறார். பானி பூரி விற்பவரும் குறைந்தவர் அல்ல. அவர்களை கிண்டல் செய்யாதீர்கள்” என யாஷிகா குறிப்பிட்டுள்ளார்.

இந்த இவருடைய கருத்து சமூக வலைத்தளங்களில் ஒரு பேச்சு பொருளாக மாறியுள்ளது.

Share this post