பட வாய்ப்புக்காக லிப் கிஸ் கேட்டாங்க.. இயக்குனர் தப்பான எண்ணத்தில்.. அடுக்கடுக்கான #MeToo புகார் சொன்ன யாஷிகா.. ஷாக்கிங் வீடியோ.

Yashika anandh opens up about me too issue happened for her

சோஷியல் மீடியா மூலம் பிரபலம் அடைந்த யாஷிகா ஆனந்த் டெல்லியில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். பள்ளி பருவம் முதலே மாடலிங், நடிப்பு என பயணத்தை தொடங்கிய யாஷிகா, ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ‘கவலை வேண்டாம்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து,  துருவங்கள் பதினாறு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

Yashika anandh opens up about me too issue happened for her

பாடம், மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த இவர், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த கவர்ச்சி கதாபாத்திரத்தின் மூலம் இளசுகள் மனதில் இடம் பிடித்து மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் மூலம் இன்டர்நெட் சென்சேஷன் ஆனார்.

Yashika anandh opens up about me too issue happened for her

இந்த வரவேற்பின் மூலம் பிக் பாஸ் சீசன் 2ல் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பங்கேற்று திறமையை காட்டி விளையாடிய இவர், சக போட்டியாளரான மஹத் உடன் இவர் செய்த காதல் லீலைகள், ஐஸ்வர்யா தத்தாவுடனான நட்பு, கவர்ச்சி உடை என சில நெகட்டிவ் விமர்சனங்களும் கிடைத்தது.

Yashika anandh opens up about me too issue happened for her

பிக் பாஸ்’ல் 5 லட்ச ரூபாய் பரிசு தொகை பெற்று, 5வது இடம் பிடித்த யாஷிகா, இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், zombie என்னும் படத்தில் நடித்தார். தற்போது, சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் அப்லோட் செய்து வருகிறார். மேலும், கடமையை செய், இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், பகீரா, பெஸ்டி போன்ற பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

Yashika anandh opens up about me too issue happened for her

சமீபத்தில் ஒரு பேட்டியில், பட வாய்ப்புக்காக இயக்குனர் ஒருவர் தனக்கு பாலியில் தொல்லை கொடுத்ததை கூறி இருக்கிறார். அதில் பேசிய அவர் ‘நான் ஒரு அதில் பட வாய்ப்புக்காக சந்தித்திருந்தேன். அப்போது அவர் எனக்கு ஒரு ஏர்போர்ட் சீன் நடித்துக் காண்பிக்க வேண்டும். நான் ஹீரோ என நினைத்துக் கொண்டு நீங்கள் என்னை லிப் கிஸ் செய்ய வேண்டும். நீங்கள் நன்றாக செய்தீர்கள் என்றால் ஓகே, இல்லை என்றால் நான் சொல்லித் தருகிறேன்’ என கூறியதாக கூறியுள்ளார்.

Yashika anandh opens up about me too issue happened for her

ஆனால், நான் அவரிடம் முதலில் நீங்க ஹீரோ கிடையாது, நான் மிகவும் சின்ன பெண் அதனால் லிப் கிஸ் எல்லாம் படத்திலேயே பண்ண மாட்டேன், நான் எதற்கு உங்களிடம் நடித்துக் காண்பிக்க வேண்டும் என் அம்மாவை கூப்பிடுங்கள் என்று சொன்னேன். ஆனால், உடனே அவர் என் அருகில் வந்து என்னை கட்டி அணைக்க பார்த்தார் உடனே நான் அவரை தள்ளிவிட்டு வெளியில் வந்து என் அம்மாவிடம் கிளம்பலாம் என்று சொல்லிவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.

Yashika anandh opens up about me too issue happened for her

ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு பெரிய இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். ஒரு ஹீரோவின் தந்தை போன்ற ஒரு இயக்குனர் அவரது பெயரை நான் சொல்ல விரும்பவில்லை என் அம்மா மூலம் அவர் என்னை பாலியல் ரீதியாக அணுக முயற்சித்தார் ஆனால் எனக்கு நேரடியாக பாலியல் துன்புறுத்தல் கொடுத்திருந்தால் நான் நிச்சயம் புகார் அளித்திருப்பேன் என்று கூறி இருந்தார்.

Share this post