யாஷிகாவிற்கு திருமணமா..? வைரலாகும் பதிவு ! ப்ளீஸ் இப்டிலாம் பண்ணாதீங்க..

Yashika anandh announces about her marriage for april fool day

2016ம் ஆண்டு ஜீவா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இருப்பினும் அடல்ட் என்டெர்டெயினர் படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

Yashika anandh announces about her marriage for april fool day

அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்ததோடு மட்டுமல்லாது தனது சமூக வலைதள பக்கங்களில் ஹாட் போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு சென்சேஷனல் ஆகவே இருந்து வந்தார். இதன் நடுவே, எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர், பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பழைய நிலைக்கு மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.

Yashika anandh announces about her marriage for april fool day

தற்போது, ஒரு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வரும் யாஷிகா, மீண்டும் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக போட்டோஸ் பதிவிட்டு மேலும், அவ்வப்போது ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடி வருகிறார்.

இந்நிலையில், அவருடைய திருமணம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நான் திருமணம் செய்து கொள்ளப்போவதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் அம்மாவும் அப்பாவும் சம்மதித்துள்ளனர்.

Yashika anandh announces about her marriage for april fool day

இது செட்டில் ஆகும் நேரம். இருப்பினும், திரைப்படங்களில் இருந்து விலகப் போவதில்லை. எனக்கு சினிமா பிடிக்கும். எதுவாக இருந்தாலும் நான் உங்கள் அனைவரையும் மகிழ்விப்பேன். இது நிச்சயிக்கப்பட்ட திருமணம். லவ் எல்லாம் செட் ஆகாது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த நிலையில், நேற்று ஏப்ரல் 1ம் தேதி என்பதால் இது ஏப்ரல் Fool தினத்திற்காக பதிவிட்டதாக அடுத்த ஸ்டேட்டஸ் வைத்து தெரிவித்து உள்ளார். இதனில் அவருக்கு தற்போது திருமணம் இல்லை என ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

Yashika anandh announces about her marriage for april fool day

Share this post