VIRAL VIDEO : பீஸ்ட் படத்த நிச்சயம் பாப்பேன்.. விஜய் சார் எனக்கு சீனியர்.. KGF 2 யாஷ் பேசிய வீடியோ வைரல் !

Yash speech on kgf2 trailer day about beast and kgf2 release

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

Yash speech on kgf2 trailer day about beast and kgf2 release

இதன் நடுவே, முதல் பாகம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று, இன்னும் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படம் கேஜிஎப் 2. இத்திரைப்படம் பற்றி இந்திய திரையுலக ரசிகர்கள் மொத்தமும் ஆர்வமாக காத்திருந்தனர்.

Yash speech on kgf2 trailer day about beast and kgf2 release

இந்நிலையில், பீஸ்ட் வெளியாகும் அடுத்த நாளே, யாஷ் நடித்து இருக்கும் கேஜிஎப் 2 படம் வெளியாகிறது. இது ரசிகர்கள் நடுவே பல கருத்துக்களை வெளிப்படுத்த வைத்துள்ளது. அதாவது பீஸ்ட் vs கேஜிஎப் 2, எது வெற்றி திரைப்படமாக அமையும் போன்ற பல கேள்விகள் உருவாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை கேஜிஎப் 2 படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்ற போது, அதில் யாஷ், சஞ்சய் தத் உட்பட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். பத்திரிகையாளர்கள் கேள்விக்கு யாஷ் பதில் அளித்து கொண்டிருக்கும்போது விஜய்யின் பீஸ்ட் உடன் நடக்கும் மோதலை எப்படி சமாளிப்பீங்க என கேள்வி கேட்டார்.

‘அது ‘பீஸ்ட் & கேஜிஎப்2’ தான் ‘பீஸ்ட் vs கேஜிஎப் 2’ அல்ல. இது எலக்ஷன் அல்ல. எல்லோரிடமும் ஒரே ஒரு ஓட்டு தான் இருக்கும், அதை அதிகம் பெறுபவர் வெற்றி பெறுவார். ஆனால் இது சினிமா. இரண்டு படங்களையும் பார்க்கலாம்.

அவர் சினிமாவுக்காக நிறைய செய்து இருக்கிறார். அவர் எனக்கு சீனியர். விஜய் சார் மீது அதிகம் மரியாதை இருக்கிறது. பீஸ்ட் படத்தை நிச்சயம் நான் பார்ப்பேன். அதே போல விஜய் ரசிகர்கள் கேஜிஎப் 2 படத்தை நிச்சயம் பார்பார்கள்’ என யாஷ் கூறி இருக்கிறார்.

Share this post