இது என்ன புது பிரச்சனை.. வாரிசு Audio Launch நடக்குமா? ரசிகர்கள் குழப்பம்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர், பீஸ்ட் இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது, தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.
தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய். இப்படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், சங்கீதா, சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் என ஒரு பிரபல நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் இருந்து ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’ என 2 பாடல்கள் வெளியாகி சூப்பர் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
தற்போது வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் விரைவில் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், வருகின்ற டிசம்பர் 24ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது. வாரிசு இசை வெளியீட்டு விழா தொடர்பாக தயாரிப்பு தரப்பு விளம்பரம் செய்து வருகிறது.
இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு விஜய்யை பார்க்கும் ஆசையில் டிக்கெட் வாங்கி வருகிறார்கள் ரசிகர்கள். விஜய்யை காண ரசிகர்கள் துடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வாரிசு இசை வெளியீட்டு விழா திட்டமிட்டபடி நடக்குமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
கொரோனா வைரஸின் புது வகை சீனாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த புது வகை வைரஸ் இந்தியாவுக்கும் வந்துவிட்டது. இதையடுத்து விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற ஒரு நேரத்தில் வாரிசு இசை வெளியீட்டு விழா நடக்குமா என்று சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், நாளை மறுநாள் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒன்றும் அதிகரித்துவிடாது. அதனால் வாரிசு இசை வெளியீட்டு விழா நிச்சயம் நடக்கும், நாங்கள் தளபதியின் குட்டிக் கதையை கேட்போம் என விஜய் ரசிகர்கள் நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர்.