கமலுக்கு பதில் நயன்தாரா?.. களமிறங்கவுள்ள லேடி சூப்பர் ஸ்டார்- யாரும் எதிர்பாராத Twist..!

who-is-the-next-host-of-bigg-boss-show-tamil

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பான பிக் பாஸ் 7 சீசன்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை காண அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 7 சீசன்களாக இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். தற்போது, பிக் பாஸில் இருந்து விலகுவதாக கமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

who-is-the-next-host-of-bigg-boss-show-tamil

அதில், ஏழு சீசன்களாக தனக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி என்றும், இந்த வாய்ப்பு விஜய் டிவி வழங்கியதற்கு நன்றி என்றும் தெரிவித்திருக்கிறார். அவருடைய சினிமாவில் இருக்கும் மற்ற கமிட்மெண்ட்ஸ்களால் இந்த நிகழ்ச்சியை தொடர முடியாத சூழ்நிலையில் இருக்கிறாராம்.

அதனால், இந்த சீசனை தன்னால் தொகுத்து வழங்க முடியாது என கமல் தெரிவித்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் 7 ம் சீசனில் கமலின் பெயர் மொத்தமாக டேமேஜ் ஆனதே இதற்கு காரணம் என்று கூறி வருகிறார்கள்.

who-is-the-next-host-of-bigg-boss-show-tamil

இந்நிலையில், கமலுக்கு பதிலாக நடிகை நயன்தாரா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வெளியாகி வருகிறது. சிம்பு படங்களில் பிஸியாக நடித்து வருவதால், அவர் வர வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், சூர்யா மற்றும் விஜய் சேதுபதி இருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். அதேபோல், நடிகை ரம்யா கிருஷ்ணன், அரவிந்த்சாமி மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோரின் பெயர்களும் இதில் அடிபட்டு வருகிறது.

Share this post