Viral Video: 'நைட்டு முழுக்க சரக்கு அடிச்சியான்னு கேட்டாரு..' மனம் திறந்து பேசிய ரம்யா.. வைரல் பேட்டி
மிஸ் சென்னை பட்டம் வென்ற விஜே ரம்யா, கலக்கப்போவது யாரு என்னும் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
நிறைய பிரபலங்களை பேட்டி காண்பது மற்றும் விருது நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரம்யா, பிரபலங்களுக்கு பேவரைட். டிடி, பாவனா வரிசையில் புகழ் பெற்ற விஜேகளில் ஒருவர் என்றே சொல்லலாம். மேலும், மொழி திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவ்வப்போது சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில், மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாஸ், வனமகன், கேம் ஓவர், ஆடை, மாஸ்டர், சங்க தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது பிட்னஸ் மீது தீரா ஆர்வம் கொண்டிருக்கும் ரம்யா, அதுக்கென்ன யூடியூப் சேனல் தொடங்கி பிட்னஸ், வெயிட் லாஸ் பற்றி எடுத்துரைத்து வருகிறார்.
இவர் தனது கணவரை விவாகரத்து செய்து அம்மா அப்பா உடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், நான் படிக்கும் வயதில் ஷூட்டிங் சென்ற போது மிகுந்த களைப்பாக இருப்பேன், இரவு முழுவதும் படித்துவிட்டு சில நேரம் ஷூட்டிங் செல்வேன். உடனே நிகழ்ச்சி கேமராமேன் என்னை பார்த்து கண்ணு சிவப்பா இருக்கு சரக்கு அடிச்சியானு கேட்டாரு, எனக்கு அங்கேயே கஷ்டமா இருக்கும் என கவலையாக கூறியுள்ளார்.