'கர்ப்பமான பன்னி மாதிரி இருந்துட்டு இது தேவையா?" உருவகேலிக்கு VJ பார்வதி கொடுத்த செருப்படி பதில்

vj parvathy reply to body shaming comment on her work out photo

பிரபல யூடியூப் சேனலில் VJ வாக பணியாற்றி வந்தவர் VJ பார்வதி. கோலிவுட் தொடங்கி பல பிரபலங்களை பேட்டியெடுத்ததன் மூலம் கோலிவுட் வட்டாரத்தில் இவரது பெயர் நல்ல வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து, சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார்.

vj parvathy reply to body shaming comment on her work out photo

அது செட் ஆகாத நிலையில் மீண்டும் விஜே வாக தனது பணியைத் தொடங்கி செய்ய தொடங்கினார். இதன் பின்னர், ஜீ தமிழ் சேனலில் பிரபலமாக ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ சர்வைவர் ஷோவில் போட்டியாளராக பங்கேற்றார். இதன் மூலம், சின்னத்திரையில் நல்ல பரிச்சயம் பெற்றார். இருந்து ரசிகர்கள் மத்தியில் சில பல செயல்களால் கேலி கிண்டலுக்கு ஆளானார்.

vj parvathy reply to body shaming comment on her work out photo

தொலைக்காட்சி மட்டுமல்லாது சில திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமாரின் சபதம் மற்றும் கருங்காப்பியம் என்னும் திரைப்படங்களில் நடித்துள்ளார். மீண்டும் விஜே வாக பணியாற்றி வரும் பார்வதி, தற்போது மிக கவர்ச்சி காட்டி போட்டோஸ் விடியோஸ் பதிவிட்டு வருகிறார்.

vj parvathy reply to body shaming comment on her work out photo

இந்நிலையில், பார்வதி இன்ஸ்டா பக்கத்தில் தனது ஒர்க் அவுட் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இதற்கு நெட்டிசன் ஒருவர், “கொடுமைடா சாமி, நல்லா ஃபிட்டா இருந்து ஸ்டேட்டஸ் போட்டா ஓகே, ஆனா இப்படி கர்ப்பமான பன்னி மாதிரி இருந்துட்டு.. முடியல” என மோசமாக கமெண்ட் செய்திருந்தார். அந்த கமெண்ட்டை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டுள்ள பாரு, “என் தொப்பையை பற்றிய இது போன்ற கமெண்ட்களும், கருத்துகளும் எதிர்பார்த்த ஒன்று தான்.

vj parvathy reply to body shaming comment on her work out photo

ஏன் பெண்கள் சரியான ஷேப்பை கொண்டிருக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கிறீர்கள். அழகின் தரத்தை தீர்மானிப்பதற்கு நீ யார்? இப்படி கமெண்ட் செய்பவர் சூப்பர் ஃபிட் ஆக இருக்கிறாரா” என்று கேள்வி எழுப்பியுள்ள பார்வதி, நான் தொடர்ந்து தொப்பையுடன் பதிவுகளை போடுவேன் என தெரிவித்துள்ளார்.

vj parvathy reply to body shaming comment on her work out photo

மேலும் என்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதும், வைத்திருக்காததும் என்னுடைய விருப்பம். தொப்பையுடன் இருப்பதும், அதோடு புகைப்படத்தை பதிவிடுவதும் சாதாரண விஷயம். நீ சந்தோஷமாக இருப்பதற்காகலாம் என்னால எதையும் பதிவிட முடியாது. இது என்னுடைய உடம்பு என்னுடைய அக்கவுண்ட், என்னுடைய விருப்பம்” என குறிப்பிட்டுள்ளார்.

Share this post