மதமாற்றமா..? 'லவ் ஜிகாத்' என விமர்சித்த நெட்டிசன்.. நச் பதிலடி பதிவிட்ட VJ மணிமேகலை.!

vj manimegalai posts answer for netizen post about her religion follow

பிரபல தொகுப்பாளினி மற்றும் விஜே-வாக பணியாற்றி வந்தவர் மணிமேகலை. சன் மியூசிக்கில் பிரபல விஜே வாக வலம் வந்த இவர், தற்போது தனி யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். முக்கிய மேடை நிகழ்ச்சிகள், பிரபலங்களை பேட்டி காண்பது எனவும் இருந்து வருகிறார்.

vj manimegalai posts answer for netizen post about her religion follow

சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிக பிரபலம் அடைந்தார். வீட்டை எதிர்த்து தனது காதலரான ஹுசைன் அவர்களை காதல் திருமணம் செய்தது. இவர்கள் ஒவ்வொரு முன்னேற்றம் குறித்து அனைத்தும் அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் திடீரென, இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

vj manimegalai posts answer for netizen post about her religion follow

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அதற்கான காரணம் என்ன என்பதை அவர் கூறவில்லை. இதனால், அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் விலகினார் என சில தகவல்கள் இணையத்தில் உலா வருகிறது. குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி இவர்கள் திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்த ஒன்றே.

vj manimegalai posts answer for netizen post about her religion follow

திருமணத்தின் போது மணிமேகலை தனது சமூக வலைத்தள பக்கத்தில், நானும் ஹுசைனும் திருமணம் செய்து கொண்டோம். அப்பாவிடம் பேச புரிய வைக்க முடியாததால் திடீரென ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டோம். காதலுக்கு மதம் தேவையில்லை. எனக்கு ஸ்ரீ ராமஜெயமும், அல்லாவும் ஒன்றுதான் என குறிப்பிட்டு திருமணத்தின் போது எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

vj manimegalai posts answer for netizen post about her religion follow

இந்நிலையில் நெட்டிசன் ஒருவர், மணிமேகலை - ஹுசைனின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், அவர்கள் இஸ்லாமிய முறைப்படி இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து ‘எப்படி முடிஞ்சு இருக்கு பார்த்தீங்களா? லவ் ஜிகாத். மதமென பிரிந்தது போதும்’ என்ற கேப்ஷனுடன் பகிர்ந்திருந்தார்.

vj manimegalai posts answer for netizen post about her religion follow

இதற்கு மணிமேகலை தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இப்படி உளறிக்கிட்டே இருக்குறதுக்கு போய் உருப்படுற வேலையை பார்க்கலாம்ல’ என நச் பதிலடி கொடுத்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் ‘இவுங்களுக்கு இதான் வேலை. மதம் மாறி காதலிச்சா லவ் ஜிகாத். சாதி மாறி காதலிச்சா நாடக காதல்ன்னு உருட்டுவாங்க’ என மணிமேகலைக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

vj manimegalai posts answer for netizen post about her religion follow

Share this post