2 கையிலும் Walking Stickவுடன் நிகழ்ச்சிக்கு வந்த டிடி.. வைரலாகும் வீடியோ !

Vj divyadharshini dd walk with walking stick to legend audio launch

ஒரு தொகுப்பாளினிக்கு ஹீரோயின் ரேஞ்சுக்கு வரவேற்பும் பிரபலமும் கிடைக்கிறது என்றால் அது நம்ம DDக்கு தான்.

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்த இவர், சில திரைப்படங்களிலும் சின்னத்திரை சீரியல் தொடர்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Vj divyadharshini dd walk with walking stick to legend audio launch

ஆனால், விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் போன்ற நிகழ்ச்சிகள் இவரது புகழ் பெற்றவை.

இவருக்கு நிறைய ஹீரோயின் திரைப்பட வாய்ப்புகள் வந்தும் கூட அதை ஏற்காமல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, பிரபலங்களை பேட்டி காண்பது என இருந்து வருகிறார்.

Vj divyadharshini dd walk with walking stick to legend audio launch

இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பின்னர், பா. பாண்டி, கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா இமை போல் காக்க போன்ற திரைப்படங்களில் டிடி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Vj divyadharshini dd walk with walking stick to legend audio launch

தற்போது குஷ்பூவின் Avni Cinemax தயாரிப்பில், சுந்த சி இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

இதில், பிக் பாஸ் சம்யுக்தா, ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்லியம்ஸ், அம்ரிதா அய்யர், ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர்.

Vj divyadharshini dd walk with walking stick to legend audio launch

அவ்வப்போது, சமூக வலைத்தளங்களில் தனது போட்டோஸ் மற்றும் விடியோஸ் பதிவிட்டு வருகிறார். பெரிய அவார்ட் வழங்கும் நிகழ்ச்சி அல்லது முன்னணி நடிகர்களின் இசை வெளியீட்டு விழா, சக்ஸஸ் பார்ட்டி போன்றவற்றில் இவர் தொகுப்பாளினியாக இருப்பதும் வழக்கம்.

Vj divyadharshini dd walk with walking stick to legend audio launch

அண்மையில் விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கி இருந்தார். அண்மையில் The Legend Movie ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியை அர்ச்சனாவுடன் இணைந்து தொகுத்து வழங்கினார்.

Vj divyadharshini dd walk with walking stick to legend audio launch

நிகழ்ச்சிக்கு வரும் போது டிடி தனது கையில் Walking Stickவுடன் நடந்து வர ரசிகர்கள் ஷாக் ஆகினர். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் கவனம் பெற்றது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு காலில் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Share this post