விஜய் டிவியை விட்டு வெளியேறும் டிடி ? பேட்டியில் என்ன சொல்லிருக்காருனு பாருங்க.. ரசிகர்கள் ஷாக்
ஒரு தொகுப்பாளினிக்கு ஹீரோயின் ரேஞ்சுக்கு வரவேற்பும் பிரபலமும் கிடைக்கிறது என்றால் அது நம்ம DDக்கு தான். விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்த இவர், சில திரைப்படங்களிலும் சின்னத்திரை சீரியல் தொடர்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆனால், விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் போன்ற நிகழ்ச்சிகள் இவரது புகழ் பெற்றவை. இவருக்கு நிறைய ஹீரோயின் திரைப்பட வாய்ப்புகள் வந்தும் கூட அதை ஏற்காமல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, பிரபலங்களை பேட்டி காண்பது என இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பின்னர், பா. பாண்டி, கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா இமை போல் காக்க போன்ற திரைப்படங்களில் டிடி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தற்போது குஷ்பூவின் Avni Cinemax தயாரிப்பில், சுந்தர் சி இயக்கும் Coffee With காதல் படத்திலும் நடித்து வருகிறார். இதில், பிக் பாஸ் சம்யுக்தா, ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்லியம்ஸ், அம்ரிதா அய்யர், ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர்.
அவ்வப்போது, சமூக வலைத்தளங்களில் தனது போட்டோஸ் மற்றும் வீடியோஸ் பதிவிட்டு வருகிறார். பெரிய அவார்ட் வழங்கும் நிகழ்ச்சி அல்லது முன்னணி நடிகர்களின் இசை வெளியீட்டு விழா, சக்ஸஸ் பார்ட்டி போன்றவற்றில் இவர் தொகுப்பாளினியாக இருப்பதும் வழக்கம்.
மேலும், தனக்கு சிறு இடைவெளி கிடைத்தாலும் வெளிநாட்டுக்கு பறந்துவிடும் இவர், அதன் போட்டோஸ் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். டிடி அண்மையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்று இருந்தார். இதில், திவ்யதர்ஷினி நிகழ்ச்சியின் இயக்குனர் ஒருவர், விஜய் டிவியை விட்டு வெளியே செல்ல வாய்ப்புகள் இருக்கிறதா என்று கேள்வி கேட்டார்.
அதற்க்கு பதிலளித்த திவ்யதர்ஷினி ‘அது அப்படியே அமைந்துவிட்டது. ஆனால், தற்போது பல விஷயங்கள் மாறிவிட்டன. என்னுடைய உடல்நலம் காரணமாக விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியவில்லை. சில நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுத்து தொகுத்து வழங்குகிறேன்.
ஆனால், எனக்கும் புதிய நிகழ்ச்சிகள் செய்யவேண்டும் என்று ஆசை இருக்கிறது. எங்கு வேண்டுமானாலும் அதை செய்யலாம் என்று நினைக்கிறன் ‘ என்று கூறியுள்ளார். இதன்முலம் விஜய் டிவியில் இருந்து வெளியேற டிடிக்கு விருப்பம் இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.