ராஜா ராணி சீரியலில் இருந்து திடீர் என விலகும் அர்ச்சனா.. இவருக்கு பதில் யார் தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அந்த வகையில், ராஜா ராணி 2 தொடர் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1 தொடர்ந்து, ராஜா ராணி சீசன் 2 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஐபிஎஸ் கனவுடன் இருக்கும் ஒரு பெண் தனது வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகள் குறித்த கதை ஆகும்.
சந்தியா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆலியா, 2வது பிரசவத்திற்காக சீரியல் இருந்து விடுபெற்றார். அதன் பின்னர், ஆலியா மானசாவிற்கு பதிலாக ரியா அந்தகதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து வரும் நடிகை அர்ச்சனா இந்த சீரியலில் இருந்து விலகபோகதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் டெலிவிஷன் விருது விழாவில், ராஜா ராணி சீரியலுக்காக நடிகை அர்ச்சனா விருதை வென்றார். இந்நிலையில், ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகுவதாக வெளிவந்துள்ள தகவல் அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மேலும், ‘ராஜா ராணி 2’ சீரியலில் அர்ச்சனாவுக்கு பதில் யார் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ‘ஈரமான ரோஜாவே’ சீரியலில் நடித்த அர்ச்சனா குமார் தான், அர்ச்சனாவுக்கு பதில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.