'நிர்வாண போட்டோ நான் வெளியிடல.. இவங்க தான் லீக் பண்ணிட்டாங்க' பகீர் தகவலை சொன்ன விஷ்ணு விஷால்

vishnu vishal opens up about nude photos release on social media

கிரிக்கெட் மீது பெரும் ஆர்வம் கொண்ட விஷ்ணு விஷால், நடிப்பு துறையில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் ஒரு எதார்த்தமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விருதுகளையும் குவித்தார். இதனைத் தொடர்ந்து, பலே பாண்டியா, துரோகி, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

vishnu vishal opens up about nude photos release on social media

முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராச்சசன் போன்ற திரைப்படங்கள் இவருக்கு பெரும் அங்கீகாரத்தையே தமிழ் சினிமாவில் பெற்று தந்தது. வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், மாவீரன் கிட்டு, கதாநாயகன், சிலுக்குவார்பட்டி சிங்கம், காடன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இறுதியாக, இவர் நடிப்பில் FIR திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

vishnu vishal opens up about nude photos release on social media

மோகன்தாஸ் திரைப்படம் ஷூட்டிங் ஒரு அளவிற்கு முடிவடைந்து விட்டது. பிரபல நடிகர் நடராஜ் அவர்களின் மகள் ரஜினி நடராஜ் அவர்களை காதல் திருமணம் செய்த இவர், 2018ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

vishnu vishal opens up about nude photos release on social media

இதன் பின்னர், பேட்மிட்டன் பிளேயர் ஜ்வாலா அவர்களை 2020ம் ஆண்டு நிச்சயம் செய்து, 2021 ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டார். இது குறித்து, சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வெளியாகின.

vishnu vishal opens up about nude photos release on social media

இதன் நடுவே, பாலிவுட் பிரபல நடிகரான ரன்வீர் சிங் சில மாதத்திற்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் நிர்வாணமாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து அதிர்ச்சி அளித்தார். அதற்கு கண்டனங்கள் குவிந்த நிலையில், விஷ்ணு விஷாலும் படுக்கையறையில் அரை நிர்வாண கோலத்தில் புகைப்படங்களைவெளியிட சர்ச்சை எழுந்தது.

vishnu vishal opens up about nude photos release on social media

இந்த போட்டோஷூட் பற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்த விஷ்ணு விஷால், தற்போது அது தான் வெளியிடவில்லை, லீக் செய்யப்பட்டுவிட்டதாக பகீர் பின்னணியை தெரிவித்துள்ளார். விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி உள்ள கட்டா குஸ்தி திரைப்படம் வருகிற டிசம்பர் 2ம் தேதி ரிலீசாக உள்ளது. அதன் புரமோஷன் நிகழ்ச்சியின் போது தான் அந்த நிர்வாண போட்டோஷூட் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.

vishnu vishal opens up about nude photos release on social media

இதற்கு பதிலளித்த விஷ்ணு விஷால், அந்த போட்டோவை 2 ஆண்டுகளுக்கு முன்னரே தான் எடுத்துவிட்டதாகவும், இருப்பினும் அதனை வெளியிடாமல் வைத்திருந்ததாகவும் கூறினார். மேலும் ரன்வீர் சிங்கின் போட்டோஷூட் வெளியானபோது நீயும் உன்னுடைய போட்டோவை போட்டா என்ன எனக்கூறி எனது மனைவி ஜுவாலா கட்டா தான் அதை லீக் செய்துவிட்டார் என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

vishnu vishal opens up about nude photos release on social media

Share this post