"மைத்ரி'யை தேடி.." தம்பிக்காக ஜோடி தேடி விளம்பரம் செய்த விஷ்ணு விஷால் !

Vishnu vishal advertises for female lead pair for his own brother for the movie

கிரிக்கெட் மீது பெரும் ஆர்வம் கொண்ட விஷ்ணு விஷால், நடிப்பு துறையில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் ஒரு எதார்த்தமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விருதுகளையும் குவித்தார்.

Vishnu vishal advertises for female lead pair for his own brother for the movie

இதனைத் தொடர்ந்து, பலே பாண்டியா, துரோகி, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராச்சசன் போன்ற திரைப்படங்கள் இவருக்கு பெரும் அங்கீகாரத்தையே தமிழ் சினிமாவில் பெற்று தந்தது.

Vishnu vishal advertises for female lead pair for his own brother for the movie

வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், மாவீரன் கிட்டு, கதாநாயகன், சிலுக்குவார்பட்டி சிங்கம், காடன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இறுதியாக, இவர் நடிப்பில் FIR திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

Vishnu vishal advertises for female lead pair for his own brother for the movie

மோகன்தாஸ் திரைப்படம் ஷூட்டிங் ஒரு அளவிற்கு முடிவடைந்து விட்டது. பிரபல நடிகர் நடராஜ் அவர்களின் மகள் ரஜினி நடராஜ் அவர்களை காதல் திருமணம் செய்த இவர், 2018ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

Vishnu vishal advertises for female lead pair for his own brother for the movie

இதன் பின்னர், பேட்மிட்டன் பிளேயர் ஜ்வாலா அவர்களை 2020ம் ஆண்டு நிச்சயம் செய்து, 2021 ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டார். இது குறித்து, சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வெளியாகின. இது பற்றி, பிரிவின் காரணம் குறித்த வதந்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது பற்றி ஒரு பேட்டியில் கவலை தெரிவித்திருந்தார் விஷ்ணு விஷால்.

Vishnu vishal advertises for female lead pair for his own brother for the movie

இந்நிலையில், விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷ்ணுவிஷால் ஸ்டூடியோ தயாரிக்கும் படம் மூலமாக தனது சகோதரர் ருத்ராவை சினிமாவில் நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

Vishnu vishal advertises for female lead pair for his own brother for the movie

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகையை தேடி வருவதாகவும் 23 முதல் 25 வரை வயது உள்ள இளம் பெண்கள் படக்குழுவினரை அணுகலாம் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளம்பரம் கொடுத்துள்ளார்.

Vishnu vishal advertises for female lead pair for his own brother for the movie

விஷ்ணு விஷால் நடித்த ’மோகன்தாஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக தயாராகி விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளிவரும் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Vishnu vishal advertises for female lead pair for his own brother for the movie

Share this post