ஹரி வைரவன் கடைசியாக அனுப்பிய Voice Message.. கலக்கத்துடன் பேசிய விஷ்ணு விஷால்!
2009ம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் வெண்ணிலா கபடி குழு. இன்று தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கும் விஷ்ணு விஷாலுக்கும், சூரிக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் இது. அதுமட்டுமின்றி இப்படத்தில் அவர்களுக்கு நண்பர்களாக நடித்த அப்புகுட்டி, நிதிஷ் போன்ற பலரும் சிறு சிறு கதாபாத்திரங்களில் சில திரைப்படங்களில் நடித்துள்ளனர்.
அந்த வகையில் வெண்ணிலா கபடி குழு படத்தில் காமெடி வேடத்தில் நடித்திருந்தவர் ஹரி வைரவன். இவர் குள்ளநரி கூட்டம் படத்திலும் விஷ்ணு விஷால் உடன் நடித்திருந்தார். உடல்நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த நடிகர் ஹரி வைரவன் அண்மையில் காலமானார்.
அவரது மனைவிக்கும் குழந்தைக்கு திரையுலகினர் உதவ வேண்டும் என நெட்டிசன்கள் குரல்கொடுத்து வந்த நிலையில், தற்போது நடிகர் விஷ்ணு விஷால், ஹரி வைரவனின் குழந்தையின் கல்விச் செலவை தான் முழுவதுமாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். கட்டா குஸ்தி படத்தின் ரிலீசுக்கு பின் திரையரங்குகளுக்கு விசிட் அடித்து வரும் விஷ்ணு விஷால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் ஹரி வைரவன் பற்றி கேட்கப்பட்டது. இதுகுறித்து அவர் பேசியதாவது : “ஹரி வைரவன் எனக்கு ரொம்ப நெருக்கமானவர். கடைசி ஆறு மாதங்களாக அவருடன் தொடர்பில் தான் இருந்தேன். இது வெளிய யாருக்கும் தெரியாது. என்னால என்ன உதவி செய்ய முடியுமோ அதை கடந்த ஆறு மாதங்களாக நான் செய்தேன்.
அவரது மனைவியிடமும் பேசினேன். என்ன உதவி வேண்டுமானாலும் நான் செய்கிறேன். குழந்தையின் படிப்பு செலவையும் ஏற்றுக்கொள்கிறேன் என அவர்களிடம் சொன்னேன். வைரவன் அனுப்பிய கடைசி வாய்ஸ் மெசேஜ் கூட என்னிடம் உள்ளது. என்ன எப்பவும் மாப்ளனு தான் கூப்பிடுவாரு. அந்த மெசேஜில் தேங்க் யூ மாப்ள, நீ எனக்கு உதவி செய்றது ரொம்ப சந்தோஷம் என சொல்லி இருந்தார்” என எமோஷனலாக பேசி இருந்தார் விஷ்ணு விஷால்.
#Vishnuvishal help to late actor #Harivairavan pic.twitter.com/QqtWqaaJF1
— chettyrajubhai (@chettyrajubhai) December 5, 2022
நடிகர் வைரவனின் குழந்தைகள் படிப்புச் செலவை ஏற்றுக்கொள்கிறேன் - நடிகர் விஷ்ணு விஷால்#HariVairavan #VishnuVishal #NewsTamil24x7 pic.twitter.com/ipWwxPMbE7
— NewsTamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) December 4, 2022