மோடி குறித்த நடிகர் விஷால் பதிவுக்கு பதில் கொடுத்த மோடி.. தீயாய் பரவும் ட்வீட் !
சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத நடிகர்களில் ஒருவராக மாறியவர், பிரபல தயாரிப்பாளரான G.K. ரெட்டி அவர்களின் மகனான விஷால்.
நடிகர் சங்கத்தில் தற்போது முக்கிய பதவி வகித்து வரும் விஷால், சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரி என்னும் தயாரிப்பு கம்பெனியும் நடத்தி வருகிறார். அவன் இவன், மருது, துப்பறிவாளன் போன்ற திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.
தற்போது இவர் நடிப்பில் லத்தி படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. நடிகர் விஷாலுக்கு 40 வயது கடந்த போதிலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தற்போது, காசி சென்றுவிட்டு வந்து பதிவிட்ட பதிவு. மோடி வரை சென்று சேர்ந்துள்ளது.
உத்திர பிரதேசத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவில், சமீபத்தில் ரூபாய் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் எவ்வித இடையூறும் இன்றி சுவாமி தரிசனம் செய்யும் விதமாக, நதிக்கரையில் இருந்து கோவிலை இணைக்கும் சுமார் 320 கிலோமீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் கொண்ட நடைபாதை வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் எவ்வித கூட்ட நெரிசலும் இன்றி, பக்தர்கள் நடந்து செல்ல வழிவகை செய்யப்பட்டது. அதேபோல் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஆன்மீக அருங்காட்சியகம், நூலகம், பக்தர்கள் ஓய்வெடுப்பதற்கு மையங்கள் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இவற்றை சமீபத்தில் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு, வந்த நடிகர் விஷால் பார்த்து வியந்தது மட்டுமின்றி, காசி விஸ்வநாதர் கோவிலை புனரமைக்க உத்தரவிட்டு, ரூபாய் 800 கோடி ஒதுக்கீடு செய்த பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளி இருந்தார்.
இது குறித்து அவர் போட்டு இருந்த பதிவில், “அன்புள்ள மோடி ஜி நான் காசிக்கு சென்று அற்புதமான தரிசனம் செய்தேன். கங்கா நதியின் புனித நீரை தொட்டேன். கோவிலை புதுப்பித்து அதை இன்னும் அற்புதமாக மாற்றி உள்ளீர்கள். எவரும் தரிசிக்க கூடிய வகையில் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் நீங்கள் செய்த மாற்றத்திற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்’ என தெரிவித்திருந்தார்.
மோடியை டேக் செய்து இவர் போட்டிருந்த பதிவை கண்ட பிரதமர் மோடி, நடிகர் விஷாலுக்கு பதில் கொடுத்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், “காசியில் உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இந்த பதிவு விஷால் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.