'யாரும் நம்பி ஏமாந்துடாதீங்க..' விஷால் மேனேஜர் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு !
பிரபல தயாரிப்பாளரான G.K. ரெட்டி அவர்களின் மகனான விஷால், நடிகர் அர்ஜுன் அவர்களுக்கு அசிஸ்டென்ட் ஆக இருந்து வந்தவர். இதன் மூலம், இவருக்கு செல்லமே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத நடிகர்களில் ஒருவராக மாறினார். இதன் நடுவே, இவர் நடிப்பில் வெளியான, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.
நடிகர் சங்கத்தில் தற்போது முக்கிய பதவி வகித்து வரும் விஷால், சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரி என்னும் தயாரிப்பு கம்பெனியும் நடத்தி வருகிறார். அவன் இவன், மருது, துப்பறிவாளன் போன்ற திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. தற்போது இவர் நடிப்பில் லத்தி படம் தயாராகி வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஷாலின் மேனேஜரான ஹரி கிருஷ்ணா தனது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டுள்ள பதிவு செம வைரலாகி வருகிறது. தன்னுடைய முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. தயவுசெய்து இந்த கணக்கில் இருந்து வரும் மெசேஜ்களை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்த இவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Dear Friends & Family, My Facebook & Instagram account has been hacked. Please do not respond or open any message or video which comes under my name
— Harikrishnan (@HariKr_official) July 21, 2022
Somebody send the message thru messenger and asking the payment
just now my friend send this screenshot, so please be careful pic.twitter.com/3ANemXl3TX