லத்தி படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் சுருண்டு விழுந்த விஷால்.. பதறிப்போன படக்குழு.. வைரலாகும் வீடியோ

Vishal got heavy injured in laththi shooting spot

பிரபல தயாரிப்பாளரான G.K. ரெட்டி அவர்களின் மகனான விஷால், நடிகர் அர்ஜுன் அவர்களுக்கு அசிஸ்டென்ட் ஆக இருந்து வந்தவர். இதன் மூலம், இவருக்கு செல்லமே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Vishal got heavy injured in laththi shooting spot

இதனைத் தொடர்ந்து, சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத நடிகர்களில் ஒருவராக மாறினார். இதன் நடுவே, இவர் நடிப்பில் வெளியான, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.

Vishal got heavy injured in laththi shooting spot

நடிகர் சங்கத்தில் தற்போது முக்கிய பதவி வகித்து வரும் விஷால், சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரி என்னும் தயாரிப்பு கம்பெனியும் நடத்தி வருகிறார். அவன் இவன், மருது, துப்பறிவாளன் போன்ற திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

Vishal got heavy injured in laththi shooting spot

தற்போது இவர் நடிப்பில் லத்தி படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Vishal got heavy injured in laththi shooting spot

லத்தி என்ற படத்தில் நடிகர் விஷால் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் கடந்த 55 நாட்களுக்கும் மேலாக ஐதராபாத்தில் நடந்து வருகிறது. படத்தில் வரும் கிளைமாக்ஸ் சண்டை காட்சிக்காக 30 நாட்கள் திட்டம் போட்டு படப்பிடிப்பை நடத்தி வந்தார் மாஸ்டர் பீட்டர் ஹெயின்.

Vishal got heavy injured in laththi shooting spot

பைட்டர்ஸ்களுடன் சண்டை போட்டு குழந்தையுடன் கீழே குதிக்கும் காட்சியில் நொடி பொழுதில் கான்க்ரீட் சுவற்றில் மோதி விஷாலுக்கு கையில் அடிப்பட்டது. அடிபட்டதையும் பொருட் படுத்தாமல் சில மணிநேரம் ட்ரீட்மெண்ட் எடுத்து விட்டு மீண்டும் படபிடிப்பில் கலந்து கொண்டார் விஷால்.

Vishal got heavy injured in laththi shooting spot

கை வலியுடன் படபிடிப்பில் படபிடிப்பில் கலந்து கொள்ளமுடியாமல் போனதால், கைக்கு ட்ரீட்மெண்ட் எடுத்த பிறகு படபிடிப்பை தொடரலாம் என, ராணா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளர்கள் ரமணா, நந்தா முடிவு செய்தனர். இதனால், கேரளாவுக்கு சென்று விஷால் ட்ரீட்மெண்ட் எடுத்து வருகிறார். கை சரியானதும் மீண்டும் மார்ச் மாதம் படபிடிப்பு தொடரும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து அதன்படி தற்போது ஷூட்டிங் நடைபெற்று வந்தது.

Vishal got heavy injured in laththi shooting spot

இந்நிலையில், லத்தி திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்தது. இதில், 100 ரவுடிகள் சேர்ந்து விஷாலை தாக்கும் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அப்போது, அவருக்கு நிஜமாகவே காலில் பலத்த அடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கீழே விழுந்து துடிதுடித்ததால், அவரால் மீண்டும் எழுந்து நிற்க முடியாத நிலையில், உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனால் படப்பிடிப்பு பாதியிலேயே நின்று போனது.

Share this post