அதுக்கு கூப்பிடுறவனை செருப்பால அடிங்க… சர்ச்சை சம்பவத்திற்கு சாட்டையடி பதில் கொடுத்த விஷால்!
கடந்த ஒரு வார காலமாகவே மலையாள சினிமாவில் பாலியல் தொல்லைகளும் அதன் புகார்களும் தலைவிரித்து ஆடி வருகிறது. இதை அடுத்து பல முக்கிய பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் மோகன் லால் உள்ளிட்ட 17 பேர் கொண்ட மலையாள சினிமா நிர்வாகிகள் கூண்டோடு நேற்று ராஜினாமா செய்து விட்டனர்.
மலையாள சினிமாவில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ரேவதி சம்பத் உள்ளிட்ட பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக தெரிவித்து அதிர்ச்சி கிளப்பி வருகிறார்கள் .அந்த வகையில் தற்போது எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல பிரபல நடிகர் விஷால் இச்சம்பவம் குறித்து பேத்திரிக்கையாளருக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
கேரளா சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறித்து கேள்வி எழுப்பியதற்கு சினிமா வாய்ப்புக்காக நடிகையிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்பவர்களை செருப்பால் அடியுங்கள். கேரளாவை போல தமிழ்நாட்டிலும் ஹேமா கமிட்டி போன்ற குழு இன்னும் சில நாட்களில் அமைக்கப்பட்டு விடும் என நடிகர் விஷால் அதிரடியாக பதில் கொடுத்தார்.