"Marriage எப்போ?".. Vishal பதில் இதுதான்😮.. வைரலாகும் வீடியோ!
பிரபல தயாரிப்பாளரான G.K. ரெட்டி அவர்களின் மகனான விஷால், நடிகர் அர்ஜுன் அவர்களுக்கு அசிஸ்டென்ட் ஆக இருந்து வந்தவர். இதன் மூலம், இவருக்கு செல்லமே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத நடிகர்களில் ஒருவராக மாறினார்.
இதன் நடுவே, இவர் நடிப்பில் வெளியான, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. நடிகர் சங்கத்தில் தற்போது முக்கிய பதவி வகித்து வரும் விஷால், சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரி என்னும் தயாரிப்பு கம்பெனியும் நடத்தி வருகிறார். அவன் இவன், மருது, துப்பறிவாளன் போன்ற திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.
அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் விஷால் நாயகனாக நடித்துள்ள படம் லத்தி. இப்படத்தில் கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார். புதுமையான போலீஸ் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ள லத்தி படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர்.
லத்தி படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் 22ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு டிரைலரை வெளியிட்டார்.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல விஷயங்களை பற்றி பேசி வரும் விஷாலிடம், தன் திருமணம் பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ள விஷால், சொன்ன பதில் செம வைரலாகி வருகிறது.
Marriage எப்போ? Vishal பதில் இதுதான்😮#Vishal #Laththi #Marriage #Cineulagam pic.twitter.com/p1sEnUAc8Y
— Cineulagam (@cineulagam) December 13, 2022