விருமன் பட போஸ்டரால் கிளம்பிய சர்ச்சை.. ஐயோ அப்டியா ? இணையத்தில் வேகமாய் பரவும் தகவல் !
அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. இப்படத்தை தொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மஹான் அல்ல, சிறுத்தை,கோ, சகுனி, தோழா, மெட்ராஸ் போன்ற பல வெற்றி திரைப்படங்களை தந்ததன் மூலம் தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார்.
கைதி, தம்பி, சுல்தான் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து, தற்போது விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் 1 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
குட்டி புலி படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையா அவர்களின் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி, கருணாஸ், சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விருமன். இப்படத்தை, சூர்யா - ஜோதிகாவின் சொந்த நிறுவனமான 2D Entertainment தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் முடிவுபெற்று படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விருமன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் ஷங்கர், சூர்யா, கார்த்தி, அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இப்படத்தின் ப்ரோமோஷன்காக பல இடங்களுக்கு படக்குழுவினர் சென்று பேட்டி கொடுத்தும், விழா நடத்தியும் வருகின்றனர். இந்நிலையில், இணை இயக்குனர் ஒருவர் விருமன் படத்தின் கதை தன்னுடையது என்றும் அதனை இயக்குனர் முத்தையா திருடி படமாக எடுத்துள்ளதாகவும் எழுத்தாளர் சங்கத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதுதொடர்பாக சமாதான பேச்சும் நடைபெற்று வருகிறதாம். கடைசி நேரத்தில் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளதால் விருமன் படம் திட்டமிட்டபடி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் கார்த்தி - முத்தையா கூட்டணியில் வெளியான கொம்பன் படமும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.