ஆயிஷாவிடம் Periods குறித்து கேட்ட விக்ரமன்.. Edit செய்யப்பட்டுவிட்டதா? ஆயிஷாவின் வைரல் வீடியோ.
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடிகை ஆயிஷா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் தற்போது விளையாடி வருகின்றனர்.
ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மெட்டி ஒலி சாந்தி, கானா பாடகர் அசல், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர். மாடல் குயின்சி எவிக்ட் ஆகி வெளியேறினர்.
இதில் போட்டியாளராக கலந்து வரும் விக்ரமன் சிறப்பாக விளையாடி வந்தார். இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளர் ஆவார். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் 2016ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே எந்த ஒரு பிரச்சனை என்றாலும் விக்ரமன் குரல் கொடுத்து வந்தார்.
இதனாலே ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ஆதரவு பெருகியது. பிக்பாஸ் வீட்டில் மக்களுக்கு பிடித்த போட்டியாளர் என்றால் அது விக்ரமன் தான். மக்கள் நினைப்பதை அப்படியே அங்கே பேசி, மனதைரியத்துடன் விளையாடி வருபவர். ஆனால், சமீபத்தில் சிலது இவருடைய செயல்கள் ரசிகர்களே கோவப்படும் அளவிற்கு மாறி வருகிறது. புரணி பேசுவது, முன்னுக்கு பின் முரணாக பேசுவது என இருந்து வருகிறார்.
இதனால் சோசியல் மீடியாவில் விக்ரமனை பூமர் அங்கிள் விக்ரமன் என்று தான் ரசிகர்களும் கிண்டல் அடித்து வருகின்றார்கள். கடந்த சில தினங்களாக விக்ரமன் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். இப்படி ஒரு நிலையில், ஆயிஷாவின் மாதவிடாய் குறித்து விக்ரமன் பேசியதாக புதிய சர்ச்சை கிளம்பி இருக்கிறது. கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் உண்மை கூறும் நாற்காலியில் ஆயிஷாவை அமரவைத்து விக்ரமன் கேள்விகளை கேட்டு இருந்தார். அப்போது விக்ரமன், ஆயிஷா அடிக்கடி தனது மாதவிட்டாய் பிரச்சனையை காரணம் காட்டுவதாக விக்ரமன் கூறியதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணம் நேற்றைய நிகழ்ச்சியில் ஆயிஷா, விக்ரமனை நாமினேட் செய்தபோது சொன்ன காரணம் தான். அதில் ஆயிஷா ‘அவர் எப்போதும் நியாயமாக பேசுவார் என்று தான் நினைத்தேன். ஆனால் அவருக்கு ஏதாவது ஆதாயம் இருந்தால் தான் அவர் நியாயம் பேசுவார் என்று கடந்த வாரம் தெரிந்தது. கமல் சார் எபிசோடில் என்னை உட்கார வைத்து கேள்வி கேட்டபோது நான் அவரிடம் என்னுடைய மாதப் பிரச்சினை குறித்து தனியாக பேசியதை சபையில் கேட்டது எனக்கு கூச்சமாக இருந்தது’ என்று கூறியிருந்தார்.
ஆயிஷாவின் இந்த வீடியோவை பகிர்ந்த ரசிகர்கள் பலரும் விக்ரமன் ஒரு பெண்ணின் மாதவிடாய் பிரச்சனை குறித்து பேசியதை ஏன் எடிட் செய்துவிட்டார்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இன்னோருபுறம் விக்ரமன் ஆயிஷாவின் mood swigs பற்றி தான் பேசினாரே தவிர அவரது மாதவிடாய் பற்றி பேசவில்லை, ஆயிஷா தான் எப்போதும் இப்டி விளையாடி வருகிறார் என்றும் கூறி வருகின்றனர்.
#Ayesha𓃵 is first person nominate clearly 🔥 ...Nethiadi Nominate,,,Vikrman Vedha Exposed by Ayesha ! #BiggBossTamil6 #Ayesha nominate always mass 🔥 #BiggBossTamil6 pic.twitter.com/36WDND0DLk
— Ƙıɴɢ (@Mikah_Amyy17) December 5, 2022
#Ayesha behaves too too Aggressive and using a health card this .Now claiming #Vikraman mentioning it as“Medical issue” can’t be accepted reason for behaviour is a problem for her. Menstruation taboo ah ? #BiggBossTamil #BiggBossTamil6 #vikraman𓃵 #VaathiVikraman #vikramanarmy pic.twitter.com/M1bVohJGvi
— siva (@winsiva1994) December 5, 2022
what was #vikraman expecting #ayesha to do here ?
— 🦁 (@LeoPhrase) December 3, 2022
already she was on her periods and
this tribal people was violationing the rules & torturing the opponents.
but vikraman said ayesha was angry & broke the door, periods is not an excuse to break things.
WORST 👎#BiggBossTamil6 pic.twitter.com/HsIbrR7wQV