'கமல் அவர்களே இது உங்கள் முப்பாட்டன் காலம் இல்லை'.. கமலை காட்டமாக விமர்சித்த விக்ரமன்..

vikraman posts about kamal haasan in old tweets getting viral

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.

vikraman posts about kamal haasan in old tweets getting viral

இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.

vikraman posts about kamal haasan in old tweets getting viral

பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

vikraman posts about kamal haasan in old tweets getting viral

சண்டைக்கு கொஞ்சம் கூட குறைச்சல் இல்லாமல் அரங்கேறி வருகிறது. இதில் அவ்வப்போது, அசீம், ஆயிஷா, அசல், விக்ரமன் போன்ற பெயர்கள் செம வைரலாகி வருகிறது. இரண்டு வாரங்கள் நிறைவடைந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக சாந்தி வெளியேற்றப்பட்டார். ஜிபி முத்து தாமாக முன் வந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

vikraman posts about kamal haasan in old tweets getting viral

இப்படி ஒரு நிலையில், பிக்பாஸ் போட்டியாளரான விக்ரமனுக்கு வாக்கு கேட்டு ரசிகர்கள் சிலர் போஸ்டர் ஒட்டி இருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே நடிகர், நடிகைகள், மாடல் உள்ளிட்டோர் கலந்து கொள்வதையடுத்து, பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக ஒரு அரசியல் பிரபலம் கலந்துகொண்டுள்ளார்.

vikraman posts about kamal haasan in old tweets getting viral

விக்ரமன் செய்தி வாசிப்பாளர் மட்டுமல்லாது ஒரு அரசியல் பிரபலமும் ஆவார். திருநெல்வேலியை சேர்ந்த இவர், பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். 2016ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார். விக்ரமன் பல அரசியல் பிரபலங்களை பேட்டி எடுத்து பலரை மடக்கி மடக்கி கேள்வி கேட்டு இருக்கிறார்.

vikraman posts about kamal haasan in old tweets getting viral

இதனால் இவர் பிக்பாஸில் போட்டியாளர்களை தெறிக்கவிடுவார் என்று பலர் நம்பிக்கொண்டு இருந்தனர். ஆனால், இவர் பிக்பாஸ் வீட்டில் ரசிகர்கள் எதிர்பார்த்ததை போல் இல்லாமல் இருந்து வருகிறார். அதிலும் இவரை அசீம் அடிக்கடி அசிங்கப்படுத்திகொண்டே இருக்கிறார். ஆனாலும், இவர் பொறுமையாக இருந்ததற்கு பலனாக இவருக்கு கமலிடம் இருந்தே பாராட்டுக்கள் கிடைத்தது.

vikraman posts about kamal haasan in old tweets getting viral

இந்நிலையில், கமல் குறித்து விமர்சித்து விக்ரமன் போட்டு இருக்கும் பழைய பதிவுகள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக Psbb பள்ளி விவகாரத்தில் கமலை விமர்சித்து இருக்கிறார். மேலும், இன்னொரு பதிவில் ஒரு மூட்டையை போல தூக்கி வருகிறார்கள் என்றால் செல்வி ஜெயலலிதா. சக்கர நாற்காலி என நக்கல் அடிக்கிறார் கமலஹாசன். ஒரு எளியவன் நாடாள வந்து விட்டானே எனும் அவர்களின் முப்பாட்டன் காலத்து வன்மம். கமல் அவர்களே இது உங்கள் முப்பாட்டன் காலம் அல்ல திருமா காலம் நீங்கள் நிச்சயம் வருந்துவீர்கள் என காட்டமாக பதிவிட்டுள்ளார் அந்த பதிவு செம வைரலாகி வருகிறது.

vikraman posts about kamal haasan in old tweets getting viral

Share this post