காரி துப்பி கொடுப்பேன் சாப்பிடுவீங்களா? அசீம் - விக்ரமன் இடையே வெடித்த சண்டை.. களேபரமான பிக்பாஸ் வீடு

vikraman azeem fight during royal museum task promo video getting viral

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.

vikraman azeem fight during royal museum task promo video getting viral

இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

vikraman azeem fight during royal museum task promo video getting viral

பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

vikraman azeem fight during royal museum task promo video getting viral

21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள். கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மேலும், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி எவிக்ட் ஆகி வெளியேறினர்.

vikraman azeem fight during royal museum task promo video getting viral

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள அசீம் முதன் மூன்று வாரம் சக போட்டியாளர்களுடன் சண்டையிட்டு வந்ததால் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து கமல்ஹாசன் வார்னிங்கும் கொடுத்தார். குறிப்பாக விக்ரமன் மற்றும் ஆயிஷாவை ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

vikraman azeem fight during royal museum task promo video getting viral

கமல் வார்னிங் கொடுத்ததால் கடந்த இரண்டு வாரங்களாக சைலண்டாக இருந்து வந்த அசீம், வேதாளம் முருங்க மரம் ஏறுன கதை போல் தற்போது மீண்டும் கத்தி ஆக்ரோஷமாக விக்ரமனுடன் சண்டையிட்டுள்ளார். இதுகுறித்த புரோமோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

vikraman azeem fight during royal museum task promo video getting viral

தற்போது பிக்பாஸ் வீட்டில் அரண்மனை டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ராஜகுருவாக இருக்கும் விக்ரமனை பார்த்து, உங்க சாப்பாட்டில் காரி எச்சை துப்பி கொடுப்பேன் சாப்பிடுவீங்களா என படைத்தளபதியாக இருக்கும் அசீம் கேட்கிறார்.

vikraman azeem fight during royal museum task promo video getting viral

இதைக்கேட்டு கடுப்பான விக்ரமன், ஏய் இப்படியெல்லாம் பேசாதீங்க என எச்சரிக்கிறார். இதன்பின் விக்ரமனை அடிக்க பாயும் அசீம், யார்ரா நீ என்ன பார்த்து ஏய்-னு பேசுற என ஒருமையில் பேச தொடங்கியதால் பதறிப்போன சக ஹவுஸ்மேட்ஸ் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயல்கின்றனர். இதைப் பார்க்கும் போது இந்த வாரம் அசீமுக்கு ஆப்பு கன்பார்ம் என்பது உறுதியாக தெரிகிறது.

Share this post