Viral Unseen Video: கோபத்தின் உச்சத்தில் விக்ரமன் & ஷிவினிடையே எழுந்த கடும் வாக்குவாதம்..
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் தற்போது விளையாடி வருகின்றனர்.
ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மெட்டி ஒலி சாந்தி, கானா பாடகர் அசல், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், மாடல் குயின்சி, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, நடிகை ஆயிஷா எவிக்ட் ஆகி வெளியேறினர்.
இந்நிலையில் விக்ரமன் மற்றும் ஷிவின் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். விக்ரமனும் சரி, ஷிவினும் சரி இருவருமே தாங்கள் சொல்லக்கூடிய கருத்தை மிகவும் வலுவாகவும் விபரமாகவும் சொல்லக்கூடியவர்கள். சில சமயம் இவர்களின் விளக்கமான கருத்துக்களே இவர்களுக்குள் வாக்குவாதத்தை அதிகப்படுத்தும். அந்த வகையில் விக்ரமன் சொன்ன ஒரு கருத்து குறித்து ஷிவின் விளக்கம் கேட்க, விக்ரமன் கொதித்திருக்கிறார்.
அதன்படி, ஷிவின் தேவையில்லாத வாக்குவாதத்தை ஏற்படுத்தியிருப்பதாக விக்ரமன் சொன்ன கருத்துக்கு நியாயம் கேட்ட ஷிவின், “அப்படி நான் என்ன பேசினேன்? என்ன நடந்தது என்று விளக்கிச் சொல்லுங்கள். உங்களுக்கு எதுவும் விளக்கம் சொல்வதற்கில்லை என்றால் எப்படி என்னுடைய பெயரை நீங்கள் எப்படி குறிப்பிட முடியும்? உங்களால் விளக்கமும் சொல்ல முடியவில்லையே?” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு விக்ரமனம், ஷிவினிடம், “ஏங்க இவ்வளவு டீடெயிலாக ஒரு விஷயத்திற்குள் போகிறீர்கள்? நீங்கள் என்ன முயற்சி செய்கிறீர்கள் என்பது தெரிகிறது .. அது நடக்காது” என்று ஆவேசமாக பேசினார்.