பிக்பாஸ்'க்கு அட்வைஸ் செய்த விக்ரமன்.. அந்த ஒரு வார்த்தையால் கிளம்பிய சர்ச்சை
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடிகை ஆயிஷா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மெட்டி ஒலி சாந்தி, கானா பாடகர் அசல், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் எவிக்ட் ஆகி வெளியேறினர்.
தற்போது, பிக்பாஸ் வீட்டில் மக்களுக்கு பிடித்த போட்டியாளர் என்றால் அது விக்ரமன் தான். மக்கள் நினைப்பதை அப்படியே அங்கே பேசி, மனா தைரியத்துடன் விளையாடி வருபவர். தற்போது, இவர் செய்த செயல் குறித்த வீடியோ ஒன்று மக்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்த வாரம் போட்டியாளர்களுக்கு ஒரு வித்தியாசமான டாஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது.
அதில் ஒரு அணியினர் ஏலியன்கள், மற்றொரு அணியினர் பழங்குடியினராகவும் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த டாஸ்கில் ஒரு தரப்பினரை அடிமை என குறிப்பிட்டு இருக்கின்றனர். அது தவறு என விக்ரமன் பிக்பாஸ் டீமிடம் வலியுறுத்தி இருக்கிறார். அதற்கு பிறகு தான் சேவகன் என அந்த வார்த்தை மாற்றப்பட்டு இருக்கிறது. விக்ரமனின் செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
While #shivin reading the task only #vikraman dubiously asked if the word was #adimai . Within few minutes the BB changed the term to servants and warned HMS not to degrade tribes. Vijay tv even can’t do basic sensitivity check. #vikraman saved their back. #biggbosstamil6 pic.twitter.com/GcvxskY8Dl
— Old joy (@Oldjoy2006) November 28, 2022