கோப்ரா ரிலீஸ் தேதியை மாஸ் வீடியோவாக வெளியிட்ட படக்குழு ! Waiting'ஏ வெறி ஆகுதே !

Vikram starring cobra release date has been announced in video format

2019ம் ஆண்டு கடாரம் கொண்டான் திரைப்படத்திற்கு பின்னர் மஹான் திரைப்படத்தில் விக்ரம் நடித்திருந்தார். ஆனால், அப்படமும் OTT தளத்தில் ரிலீஸ் ஆன நிலையில், அவரது ரசிகர்கள் திரையரங்குகளில் விக்ரமின் நடிப்பை பார்க்க பெரும் ஆர்வத்தில் உள்ளனர்.

துருவ நட்சத்திரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வந்த நிலையிலும் எந்த வித அப்டேட் இல்லாமல் ரசிகர்கள் காத்து கிடந்தனர்.

Vikram starring cobra release date has been announced in video format

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் கோப்ரா. இதன் போஸ்டர், விக்ரம் லுக் அனைத்தும் பெரிய ஆர்வத்தை தூண்டியது.

இவர் ஏற்கனவே 2015ம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டிமாண்டி காலனி’, 2018ம் ஆண்டு நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தான் கோப்ரா படத்தை இயக்குவதால் இப்படத்தின் மீது ஆர்வம் அதிகரித்தது.

Vikram starring cobra release date has been announced in video format

கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க லலித் குமார் தயாரிக்கிறார்.

Vikram starring cobra release date has been announced in video format

கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாகவும், கோப்ரா படத்தின் அனைத்து படப்பிடிப்பும் 14.02.2022 அன்றுடன் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தது. கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு 3 வருடங்கள் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இப்படத்தின் அதிரா பாடலை படக்குழு வித்தியாசமான வீடியோவுடன் வெளியிட்டது.

Vikram starring cobra release date has been announced in video format

இப்பாடலில் பல கெட் அப் போடும் வகையில் விக்ரம் இருப்பது இப்படத்தில் ஏதிர்பார்பை கூடியுள்ளது.

ரிலீசுக்கு தயாராக உள்ள இந்த படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் ஆகஸ்ட் 11 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this post