விக்ரம் படக்குழுவினருக்கு வக்கீல் நோட்டீஸ் ! அப்போ என்னாகும் படம் ரிலீஸ் ?

Vikram movie pathala pathala song lyrics issue notice issued against movie

கமல்ஹாசன் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தை கைதி, மாஸ்டர் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் ஹாசன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம், சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.இப்படம் வருகிற ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

Vikram movie pathala pathala song lyrics issue notice issued against movie

இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் கேங்ஸ்டராக நடித்துள்ளார். இதன் ட்ரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இப்படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இப்படத்தில் இருந்து கடந்த வாரம் ரிலீசான ‘பத்தல பத்தல’ பர்ஸ்ட் சிங்கிள் பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்பாடலை கமல் ஹாசன் தனது சொந்த லிரிக்ஸ் மற்றும் குரலில் பாடியிருந்தார். இதில் இடம்பெற்ற ஒரு சில வரிகள் குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

‘கஜானாலே காசில்லே கல்லாலையும் காசில்லே காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே.! ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே ! சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே ! ‘

என்னும் வரிகள் மத்திய அரசை குறித்து பேசியது போல இருக்கிறது என்றும், இன்னும் சில வரிகள் ஜாதிய ரீதியாக பிரச்சனைகளை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளதாக அந்த வரிகளை நீக்கக் கோரி நடிகர் கமல்ஹாசன், அனிருத், லோகேஷ் கனகராஜ், சோனி மியூசிக் கம்பெனி,ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் ஆகியோர்களுக்கு, ஆர்.டி.ஐ.செல்வம் சாா்பில் வழக்கறிஞர்கள் சென்னை சாிதா, திருநெல்வேலி துரைராஜ் மற்றும் மதுரை துரைராஜ் ஆகியோா் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

Vikram movie pathala pathala song lyrics issue notice issued against movie

நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற இரண்டு நாட்களுக்குள் நடிகா் கமல்ஹாசன் உாிய பதில் அளிக்காவிட்டால் அனைத்து இணைய தளங்களில் இருந்தும் விக்ரம் படத்தின் “பத்தல பத்தல” பாடலை நீக்க கோரி யூடியூப் இந்தியா மற்றும் பிற இணையதளங்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்படும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தில் புகார் அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

விக்ரம் படத்தின் டிரைலர், ஆடியோ நேற்று வெளியிடப்பட்ட நிலையில் ப்ரோமோஷன் வேலைகள் துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்திற்கே சிக்கல் வரும் நிலையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இனி இந்த சிக்கல் அடுத்து என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.

Share this post