அருண் குமாராக 'கமல்'.. விக்ரமாக 'சூர்யா'.. இணையத்தில் கசிந்த விக்ரம் படத்தின் சஸ்பென்ஸ் !

Vikram and surya character names leaked on internet from vikram movie

கமல்ஹாசன் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் விக்ரம். 1986ம் ஆண்டு கமல், அம்பிகா, சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம்.

ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கடத்தப்பட்ட ராக்கெட்டை கண்டுபிடித்து, மீட்பது தான் அப்படத்தின் கதை. மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமான அப்படத்தை ராஜசேகர் இயக்கி இருந்தார்.

Vikram and surya character names leaked on internet from vikram movie

தற்போது 34 ஆண்டுகளுக்கு பிறகு அதே டைட்டிலில் கமலை வைத்து, கைதி, மாஸ்டர் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் ஹாசன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Vikram and surya character names leaked on internet from vikram movie

விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம், சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பான் இந்தியா படமாக 5 மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இப்படம் வருகிற ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

Vikram and surya character names leaked on internet from vikram movie

விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இப்படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

Vikram and surya character names leaked on internet from vikram movie

ட்ரைலரில் சண்டை காட்சிகள், கோபம், சூர்யாவின் சிறப்பு தோற்றம் என பலதும் ரசிகர்கள் பேசி வந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் ட்ரைலர் மூலம் கதையை பற்றி எந்த மாதிரியான ஹின்ட் எதுவும் தெரிவிக்கவில்லை.

Vikram and surya character names leaked on internet from vikram movie

இப்படத்தில் இருந்து ரிலீசான ‘பத்தல பத்தல’, போர்கண்ட சிங்கம், Wasted போன்ற அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில், சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். க்ளைமாக்சில் 10 நிமிடங்கள் சூர்யா வரும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதில் கைதி 2 பட கதையின் ஆரம்பமாக இருக்கும் என கமல் கூறியிருந்தார்.

Vikram and surya character names leaked on internet from vikram movie

மேலும், ட்ரைலர் மற்றும் போர்க்கண்ட சிங்கம் போன்ற காட்சிகளில் வரும் குழந்தை யார் என பலரும் கேட்டு வந்த நிலையில், சூர்யா சிறுவயதில் இருக்கும் போது தான் வரைந்த அவரின் ஓவியத்தை சமீபத்தில் சூர்யாவின் தந்தை மற்றும் நடிகருமான சிவக்குமார் வெளியிட்டார் .

Vikram and surya character names leaked on internet from vikram movie

குழந்தை பருவத்தில் உள்ள சூர்யாவின் முகமும், விக்ரம் டிரைலரில் காட்டப்படும் குழந்தையின் முகமும் ஒரே மாதிரி உள்ளது. இதனால் விக்ரம் படத்தில், அந்த குழந்தை தான் வளர்ந்து பெரியவனாகி வரும் சூர்யா என கூறப்படுகிறது.

Vikram and surya character names leaked on internet from vikram movie

தற்போது, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, படத்தில் ஃபகத் ஃபாசிலின் பெயர் அமர் எனவும், விஜய் சேதுபதியின் பெயர் சந்தானம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் கமலின் பெயர் கமாண்டர் அருண்குமார்.

Vikram and surya character names leaked on internet from vikram movie

முரட்டுத்தனமான ரா ஏஜன்ட் ரோலில் கமல் நடிக்கிறார் என சொல்லப்பட்டது. அப்போ டைட்டில் விக்ரம் யார் என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில், ட்ரைலர் சீனில் கமல், விக்ரம் விக்ரம் என கத்துவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும்.

தற்போது, சூர்யா தான் பெரியவனாக வளர்ந்து வரும் விக்ரம் என சொல்லப்படுகிறது.

Vikram and surya character names leaked on internet from vikram movie

Vikram and surya character names leaked on internet from vikram movie

Share this post