தளபதி66 படக்குழுவினருடன் விஜய்யின் லேட்டஸ்ட் போட்டோஸ்.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள் !
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இருந்தாலும், ரசிகர்கள் நடுவே நல்ல வசூல் பெற்றது. இப்படம் தியேட்டரில் ரெஸ்பான்ஸ் குறையவே, தற்போது OTTயில் வெளியாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66.
தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் தளபதி66.
இப்படத்தில், விஜய் உடன் சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்டோர் நடிப்பதாக அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியானது.
மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இப்படத்தின் ஷூட்டிங்காக விஜய் ஹைதராபாத் செல்லும் ஏர்போர்ட் வீடியோ ஒன்று வைரல் ஆனது.
ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் செய்யவுள்ளதாக தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம், இப்படத்தில் நடிகர் பிரபு மற்றும் பிரகாஷ் ராஜ் இணைவதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டது.
அந்த அறிவிப்பில், இப்படம் வரும் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தில் பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பிரபல மாடல் அழகியான சம்யுக்தா இணைந்துள்ளதாக தகவல் வெளியானது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என நடந்து வருகிறது. ஏற்கனவே சென்னையில் செட் அமைத்து பாடல் ஷூட்டிங் செய்தனர்.
இந்நிலையில், ஹைதராபாத் சென்றுள்ள தளபதி விஜய், மரியாதை நிமிர்த்தமாக தெலுங்கானா முதலமைச்சர் சந்தரசேகர் ராவ் அவர்களை நேரில் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், விடியோக்களும் வைரலாக பரவி வந்தன.
இதன் நடுவே, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து விஜய் வீடியோ கால் பேசிய புகைப்படங்களும் வைரல் ஆனது. தற்போது, போக்கிரி, கில்லி, வில்லு போன்ற படங்களில் ஒன்றாக விஜய் உடன் நடித்த பிரகாஷ் ராஜ் இப்படத்தில் இணைந்துள்ள நிலையில், இவர்கள் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வந்தது.
இந்நிலையில், படக்குழுவினருடன் விஜய் எடுத்த போட்டோ தற்போது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தில் விஜய் உடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார் உள்ளிட்டோர் உள்ளனர்.