தமன்னாவுடன் 5000 தடவை…. அந்த ரகசியத்தை வெளிப்படையா கூறிய விஜய் வர்மா!
இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக இருந்து வரும் நடிகை தமன்னா பாலிவுட் சினிமாவில் இளம் ஹீரோவான நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். அவ்வப்போது இவர்கள் இருவரும் டேட்டிங் அவுட்டிங் செல்லும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கசிந்ததை தொடர்ந்து தாங்கள் காதலிப்பதை இவர்கள் இருவருமே வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர்.
நடிகை தமன்னா தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது பிஸியான நடிகையாக இருந்து வரும் நடிகை தமன்னா விஜய் வர்மாவை விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் இருக்கிறார். இப்படியான சூழலில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் வர்மாவிடம் தமன்னாவுடன் ஆன காதல் பயணம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு….
எங்களுடைய காதல் பயணம் மிகச் சிறந்ததாக சென்று கொண்டிருக்கிறது. இருவருக்குள்ளும் நல்ல புரிதல் இருக்கிறது. நானும் தமன்னாவும் இணைந்து இதுவரை எடுத்துக்கொண்ட பல புகைப்படம் என்னிடம் இருக்கிறது. கிட்டத்தட்ட 5000 புகைப்படங்கள் இருக்கும். ஆனால் அவை அனைத்தையும் நான் சமூக வலைதளங்களில் பதிவிட விரும்புவதில்லை பதிவிடவும் மாட்டேன்.
ஏனென்றால் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் மதிக்கிறோம். அது அத்தனை புகைப்படங்களையும் என் இதயத்தில் அன்பான இடத்தில் வைத்திருக்க விரும்புகிறேன் என கூறினார். தமன்னா மீது அவர் வைத்துள்ள இந்த ஆழமான அன்பு இதன் மூலம் தெரிவதாக ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.