Viral Video: விஜய் டிவியை மோசமாக கலாய்த்த ராமர் ? இதனால் தான் chance குறைந்ததா ?
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மிமிக்ரி ஆர்டிஸ்டாக சின்னத்திரையில் அறிமுகமானவர் ராமர். இதையடுத்து பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் நகைச்சுவை நடிகராக பங்கேற்று ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.
குறிப்பாக அது இது எது நிகழ்ச்சியில் சொல்வதெல்லாம் உண்மை ஷோவை கிண்டலடித்து இவர் பண்ணிய பேசிய ‘என்னம்மா இப்படி பண்றீங்களே மா’ என்ற டயலாக் அவரை பட்டி தொட்டி எங்கும் பாப்புலர் ஆக்கியது.
மதுரையை அடுத்த மேலூர் தான் ராமரின் சொந்த ஊர். இவர் சில படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒரு காலத்தில் முக்கிய காமெடியனாக இருந்தவர் ராமர். தற்போது அந்த சேனலுக்கு அவருக்கு மவுசு குறைந்துவிட்டது. அவர் சில நிகழ்ச்சிகளில் மட்டுமே வந்து காமெடி செய்கிறார்.
ஒரு நேரத்தில் விஜய் டிவியின் எல்லா ஷோக்களிலும் ராமர் இருப்பார். ஆனால் தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. ராமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் அவ்வப்போது சேனலை கலாய்க்கும் வகையில் தான் பல நேரம் பேசுகிறார்.
சமீபத்தில் ‘ராஜு வூட்ல பார்ட்டி ஷோவில் கலந்துகொண்ட அவர் நடிகை தான்யாவிடம் பேசும்போது ‘விஜய் டிவிக்கு வந்தால் பென்ஷன் வாங்கும் வரை எந்த டென்ஷனும் இல்லாமல் இருக்கலாம்’ என கலாய்க்கும் வகையில் பேசி இருக்கிறார். அந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.
பென்ஷன் வாங்குற காலம் வரைக்கும் டென்ஷன் இல்லாமல் வாழ வேண்டுமென்றால் விஜய் டிவியில் சேர்ந்து விட வேண்டும் pic.twitter.com/xr9RhIhwwG
— Fᵢₗₘ Fₒₒd & Fᵤₙ (@FilmFoodTravel) September 26, 2022