'ஆரிரோ ஆராரிரோ.. இது தந்தையின் தாலாட்டு..' வீடியோவுடன் வீட்டில் புது வரவை அறிமுகப்படுத்திய புகழ்!
விஜய் தொலைக்காட்சியில் ஒரு ஓரமாக எங்காவது நமது முகம் தெரிந்து விட்டால் நிச்சயம் பெரிய பிரபலம் ஆகி விடலாம் என்று பலர் போல எண்ணம் கொண்டு நடிப்புத் துறையில் அடியெடுத்து வைத்தவர் புகழ். லேடி கெட்டப், காமெடியன் என பல வேஷங்களில் பல நிகழ்ச்சிகளில் வந்து போனவர் தான் புகழ்.
இருப்பினும் அவரை பெரிதும் வரவேற்கும் விதமாக அவருக்கு திருப்புமுனையாக எதுவும் அமையவில்லை. இந்நிலயில், விஜய் தொலைக்காட்சியில் 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தனி ரசிகர் பட்டாளமே பெற்றார். 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஷோவாக இந்நிகழ்ச்சி இருந்தது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைவதற்கு காரணம் அதில் பங்கேற்கும் கோமாளிகள் தான். குறிப்பாக பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, சுனிதா, புகழ் என இவர்களுக்கு பேன் பேஸ் உருவானது. இதில் புகழ் சிறிய வயதினர் முதல் பெரியோர் வரை பேவரைட்டாக மாறிவிட்டார்.
இவர் முதல் இரண்டு சீசனில் செய்த லூட்டிக்கும் குறும்புத்தனமான சேட்டைகளுக்கும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு தற்போது சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. எதற்கும் துணிந்தவன் மற்றும் வலிமை திரைப்படங்களில் புகழ் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்த வகையில், தற்போது ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்னும் படத்தில் இவரே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். கோலிவுட்டில் படுபிசியான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் புகழ். படங்களில் பிசியாக இருப்பதால் சின்னத்திரையில் இருந்து ஒரு குட்டி பிரேக் எடுத்திருக்கிறார்.
இதன் நடுவே, பென்சியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பென்சியாவை காதலித்ததை ரகசியமாக வைத்திருந்தார் புகழ். திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தான் இந்த விஷயத்தை அனைவர்க்கும் தெரிவித்தார்.
இந்நிலையில், புதிதாக ஒரு நாய்க்குட்டி வாங்கியுள்ள இவர்கள், புகழ் அதை கொஞ்சி விளையாடும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் ‘ஆரிரோ ஆராரிரோ.. இது தந்தையின் தாலாட்டு..’ என பாடலுடன் பதிவிட்டுள்ளார்.