விரைவில் விஜய் டிவி சூப்பர்ஹிட் சீரியல்களில் நடக்கப்போகும் மிகப்பெரிய ட்விஸ்ட்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர்களின் வரிசையில் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி 2. இதில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் அனைவரும் மிக பேமஸ்.
அந்த வகையில், ராஜா ராணி 2 தொடர் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1 தொடர்ந்து, ராஜா ராணி சீசன் 2 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஐபிஎஸ் கனவுடன் இருக்கும் ஒரு பெண் தனது வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகள் குறித்த கதை ஆகும்.
சந்தியா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆலியா, 2வது பிரசவத்திற்காக சீரியல் இருந்து விடுபெற்றார். அதன் பின்னர், ஆலியா மானசாவிற்கு பதிலாக ரியா அந்தகதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும், டிஆர்பியில் டாப் இடத்தை பிடித்து வரும் சீரியல் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் தொடரில் கதாநாயகனாக நடித்து வருபவர் அருண் பிரசாத்திற்கு கடந்த வருடம் சிறந்த கதாநாயகன் விருது கிடைத்தது. இத்தொடரில் முதலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிப்ரியன், சில பல கமிட்மென்ட் காரணமாக இத்தொடரை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக, வினுஷா ரோஷினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
டிஆர்பியில் விஜய் டிவியில் முன்னிலை வகிக்கும் ப்ரைம் டைம் சீரியல்கள் ஆனா பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 ஆகிய சீரியல்களையும் இணைத்து ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக போகிறது. இந்த இரண்டு சீரியல்களையும் ஏற்கனவே கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஒரு முறை மகா சங்கமம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த எபிசோடுகள் அனைத்தும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் எகிறியது. தற்போது மீண்டும் இந்த இரண்டு சீரியல்களையும் இணைத்து டிஆர்பியை அதிகரிக்க விஜய் டிவி பக்கா பிளான் போட்டிருக்கிறது.
பொதுவாக சீரியலில் முக்கிய கதாபாத்திரம் மாற்றப்பட்டால் அதை ஏற்றுக் கொள்வதற்கு ரசிகர்களுக்கு காலதாமதம் ஏற்படும். அப்படிதான் இந்த இரண்டு சீரியல்களின் நிலைமை இருக்கிறது. எனவே ரசிகர்களுக்கு சுவாரசியத்தை அதிகப்படுத்துவதற்காக டல்லடிக்கும் இந்த இரண்டு சீரியல்களையும் இணைத்துள்ளனர்.
இந்த மகா சங்கம் படத்திற்குப் பிறகு பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 ஆகிய இரண்டு சீரியல்களும் இணைந்து முன்புபோலவே முன்னணி சீரியல்கள் ஆக மாற்ற இந்த மகா சங்கமத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன்பிறகு ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களின் லிஸ்டில் இந்த இரண்டு சீரியல்களும் மாறும் என விஜய் டிவி நம்புகிறது.